tamilnadu

img

தமிழ் வளர்ச்சித் துறை பேச்சுப் போட்டி ஓரியண்டல் அரபி பள்ளி மாணவி முதலிடம்

தமிழ் வளர்ச்சித் துறை பேச்சுப் போட்டி ஓரியண்டல் அரபி பள்ளி மாணவி முதலிடம்

மயிலாடுதுறை, அக்.24 - தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 11 மற்றும் 12 ஆம்  வகுப்பு மாணவ - மாணவி களுக்கு, மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவில் பேச்சுப் போட்டிகள் நடை பெற்றன.  இந்த போட்டியில் மயிலா டுதுறை மாவட்டம், செம்ப னார்கோவில் அருகேயுள்ள ஆக்கூர் ஓரியண்டல் அரபி  அரசு உதவிபெறும் மேல் நிலை பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி  சி.சஜிதா முதல் பரிசை தட்டிச்சென்றார். முதல்  பரிசாக ரூ.10 ஆயிரம் பெற்று மாநில அளவில் நடை பெறும் பேச்சு போட்டிக்கு தேர்வாகியுள்ளார். வெற்றி பெற்ற மாணவி  சஜிதாவை பள்ளி தலை மையாசிரியர் ஷாஜஹான், செயலாளர் முகமது சாதிக், தாளாளர் சலாஹுதீன், ஆக்கூர் நிர்வாக சபை தலைவர் முஹமது சித்திக் மற்றும் ஆசிரியர்கள்-ஆசிரியைகள், பெற்றோர் கள் பாராட்டி வாழ்த்தினர்.