கேரளம், ஆந்திராவிலும் கோவில் நிதியில் கல்லூரிகள் அமைச்சர் சேகர் பாபு விளக்கம்
சென்னை, ஜூலை 10 - கோவில் நிதியில் கல்லூரிகள் அமைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம் எழுப்பியதற்கு, அமைச்சர் பி.கே. சேகர்பாபு விரிவான விளக்கம் அளித்துள்ளார். இந்து சமய அறநிலை யத்துறை சார்பில் தற்போது 25 பள்ளிகள், ஒரு பாலிடெக்னிக் கல்லூரி, 9 கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருவ தாகவும், அதில் 22,455 மாணவர்கள் பயின்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். 1000 ஆண்டுகளுக்கு முன்பே மன்னர்கள் காலத்தில் கோவில்களில் கல்விச்சாலைகள் இருந்ததாகவும், சோழர் கால கல்வெட்டுகள் இதை உறுதி செய்வதாகவும் அமைச்சர் விளக்கி யுள்ளார். கேரளம், ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் கோவில் நிதியில் கல்லூரிகள் இயங்குவதாகவும், எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இதுபோன்ற கல்லூரிகள் தொடங்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.