tamilnadu

img

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கண்டித்து மாதர், மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், செப்.9 -  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தலைமை அஞ்சல் நிலையம் அருகில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும்  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் சார்பில், “பட்டுக் கோட்டை, பாப்பாநாடு பகுதியில் தொடர்ந்து  பெண்களுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் வன்புணர்வு சம்பவங்களை கண்டித்தும், அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை, கடுமையான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். பெண்களுக்கு உரிய பாது காப்பு வழங்க வேண்டும்” என வலியுறுத்தி  திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு, மாதர் சங்க மாவட்டச்  செயலாளர் இ.வசந்தி, தமிழ்நாடு அனைத்து  வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.எம். இளங்கோவன்  ஆகியோர் தலைமை வகித்தனர்.  இதில், தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.ஜான்சிராணி, மாதர்  சங்கம் மாநிலச் செயலாளர் எஸ். தமிழ்ச்செல்வி,  மாவட்டத் தலைவர் (பொறுப்பு) ஆர்.கலைச் செல்வி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாநிலக்  குழு உறுப்பினர் டி.கஸ்தூரி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாதர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்கங் களின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.