tamilnadu

img

பொதுவுடமை இயக்கத்தின் புகழ் மைந்தர் பொன்னையா!

1940-ஆம் ஆண்டுக ளில் நாட்டில் மிகப்பெரும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் உணவின்றித் தவித்தனர். மதுரை மாவட்டம் பொதும்பு கிராமத்தில் சமயன் என்பவர் பெரிய நிலச்சுவான்தார். ஆயி ரம் மூடை நெல்லை சேமிப்பாக தன் வீட்டில் வைத்திருந்தார். அந்த தகவலறிந்து, கலெக்டர் அலுவலகத்திலிருந்து அதி காரிகள் வந்து நெல் மூடை களைத் தந்து உதவுங்கள் என்று கேட்டனர். அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று அவர் அனுப்பி விட்டார். அதனால் வெறுங்கையோடு அதிகாரி கள் திரும்பினர்.  எதிரில் வந்த கம்யூனிஸ்ட் தோழர் பொன்னையா, என்ன விஷயம் நீங்கள் வந்தது எனக் கேட்டார். அவர்கள் நடந்த தைக் கூறியுள்ளனர். உடனடி யாக அவர்களை தோழர் பொன்னையா அந்த நிலச்சு வான்தாருக்குச் சொந்தமான குடோனுக்கு அழைத்துச் சென்று பூட்டை உடைத்து ஆயிரம் நெல் மூடைகளை எடுத்துக் கொள்ளும்படி கூறு கிறார். ஆனால் அதிகாரிக ளோ, தயங்கினர். அதற்குத் தோ ழர் பொன்னையா, ‘‘தயங்கா தீர்கள். நான்தான் அந்த நிலச் சுவான்தாரின் ஒரே மகன்’’ என்று கூற அதிகாரிகள் வண்டிகளில் நெல்லை ஏற்றிக் கொண்டு சென்றனர்.  இந்தச் சம்பவத்தால் தந்தைக்கும் மகனுக்கும் மோதல் ஏற்பட்டது. பின்னர் சமாதானம் ஆகினர். மக்க ளுக்கு ஆயிரம் நெல் மூடைக ளை கிடைக்கச் செய்ததால் பொதும்பு பொன்னையா, மதுரை கலெக்டர் ஆபீஸ் போ னால் அனைத்து அதிகாரிக ளும் எழுந்து நிற்கும் அள விற்கு மரியாதை ஏற்பட்டது. ஆனால் 1948-ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்ட காலகட்டத்தில், வேட்டையாடப்பட்ட இயக்க மாக கம்யூனிஸ்ட் இயக்கம் இருந்தது. அந்தப் போராட்டக் களத்தில் அளப்பரிய தியாகம் செய்த கிராமமாக பொதும்பு திகழ்கிறது. கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் பொதும்பு  கிராமத் தோழர்கள் பாப்பாத்தி, வீராயி, வீரணன் உள்ளிட்ட 22 பேர் தலைமறைவாக வாழும் நிலை ஏற்பட்டது. தோழர் பி.முத்துவை கைது செய்து பெல்லாரி சிறை யில் அடைத்தது காவல்துறை.  இந்த தலைமறைவு காலத்தில் ஒரு நாள் கட்சிப் பணியாக முக்கிய ஊழியரான மேட்டுப் பட்டி பி.எஸ்.வெங்கடசாமியை சந்தித்து விட்டுத் திரும்பும் வழி யில் உள்ள அரியூர் ஓடை நடு வே உள்ள பாறையில் படுத்து உறங்கினார் தோழர் பொன் னையா. போலீசாரின் துப்பாக்கிக் குழல்கள், காடு மேடெல்லாம் பொன்னையாவின் உயிரைக்  குடிக்கத் தேடித்திரிந்த காலத் தில் அதற்கெல்லாம் தப்பி தலைமறைவாக இருந்து கட்சி வேலைகளைச் செய்து வந்த மாவீரனை, பாறையின் இடுக்கில் இருந்து வந்த நச்சர வம் தீண்டிவிட்டது. ஒளி மிகுந்த அவரது விழிகள் மூடி விட்டன.