ஜல்லிக்கட்டு: பரிசுப்பொருட்கள், நன்கொடை அளிக்க தடை
மதுரை, ஜன.11- மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதற்கான நன்கொடை, பரிசுப் பொருட்களை தனிநபரிடம்,விழாக்குழுவினரிடம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நன்கொடை செலுத்த விரும்புபவர்கள் மதுரை தல்லாகுளம் கிளை, கனரா வங்கிக் கணக்கு எண்:10121010249222 (ஐஎப்எஸ்சிகோடு:CNRB0001012,, எம்சிஆர் கோடு எண்:625015008) என்ற மதுரை ஆட்சித்தலை வரின் வங்கிக் கணக்கில் செலுத்தலாம். பரிசுப்பொருட்களை அளிக்க விரும்புபவர்கள் அவனியாபுரம் கிராமத்திற்கு ஜல்லிக்கட்டு அலுவல் குழுத் தலைவரான வருவாய் கோட்டாட்சியர், மேலூர் அவர்களிடமும். பாலமேடு மற்றும் அலங்காநல்லூர், பாலமேடு கிராமங்களுக்கு ஜல்லிக்கட்டு அலுவல் குழுத்தலை வரான வருவாய் கோட்டாட்சியர், மதுரை அவர்களிடம் வழங்கவேண்டும்.மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
இளைஞர் தற்கொலை
தூத்துக்குடி, ஜன.11- தூத்துக்குடி, முத்தையாபுரம் கிருஷ்ணா நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் கனிமுருகன் மகன் மாடசாமி (19), இவரை கடந்த 2 தினங்களுக்கு முன்பு முத்தையாபுரம் போலீசார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர். பின்னர் அவரை ஜாமீனில் விடுதலைசெய்துள்ளனர். இதனால் கனிமுருகனை அவரது தந்தை கண்டித்து தரக்குறைவாக திட்டினாராம். இதனால் மனவேதனையடைந்த அவர் நேற்று தனதுவீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.