பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) உள்ள திரி வேணி சங்கமத்தில் (கங்கை, யமுனை, சரஸ்வதி) 12 ஆண்டு களுக்கு ஒரு முறை நடைபெறும் கும்ப மேளா நிகழ்வு ஜன வரி 13ஆம் தேதி தொ டங்கியது. பிப்ரவரி 26ஆம் தேதி கும்ப மேளா நிறைவு பெறும் இந்நிகழ்வில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் நீராடி வருகின்றனர். இந்நிலையில், அலகாபாத் மற்றும் திரிவேணி சங்கமத்தில் பாயும் ஆற்று நீரை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அந்த நீரானது மனிதர்கள் குளிப்பதற்கு உகந்த தரத்தில் இல்லை என்பது தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித் துள்ள ஆய்வறிக்கையில் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய மாசு கட்டுப் பாட்டு வாரியம் ஆய்வறிக்கையை சுட்டிக் காட்டி திங்களன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், “திரிவேணி சங்கமத்தில் பாயும் ஆறு களில் மனித கழிவுகள் அதிகளவில் கலந் துள்ளது. இதன் காரணமாக அவற்றின் வழியே பரவும் “பீக்கல் கோலிபார்ம் (எப்சி)” நுண்ணுயிரிகளால் ஆற்று நீர் கடுமையாக மாசடைந்துள்ளது. இதனால் கும்பமேளாவில் பாயும் ஆறுகளின் நீர் குளிப்பதற்கு உகந்தது அல்ல” என கூறப்பட்டுள்ளது.