பாஜக ஆளும் உத்த ரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) உள்ள திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்ப மேளா நிகழ்வு ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26ஆம் தேதி கும்பமேளா நிறைவு பெறு கிறது. இந்த கும்பமேளா நிகழ்வுக்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக ஒன்றிய மற்றும் உத்தரப்பிரதேச பாஜக அரசுகள் விளம்பரம் செய்தன. ஆனால் கும்பமேளா செல்லும் மக்களுக்கு போக்குவரத்து, தங்குமிடம், கழிவறை, திரிவேணி சங்கமத்தில் நீராடும் இடங்களில் சாதாரண அடிப்படை வசதிகளை கூட செய்து தரப்படவில்லை. விஐபி சிறப்பு நுழைவு மூலம் தினமும் கோடிக்கணக்கில் வரு வாய் வருவதால், விஐபி வசதிக்கு மட்டுமே உத்தரப்பிரதேச பாஜக அரசு முன்னுரிமை அளித்து வரு கிறது. இதன் விளைவாக கடந்த ஜனவரி 28 அன்று மவுனி அமாவாசை நாளில் திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழந்தனர்.
தில்லியிலும் 18 பேர் பலி
கும்பமேளா செல்லும் மக்க ளுக்காக ரயில்வேதுறை போக்கு வரத்து போதுமான ஏற்பாடுகளை செய்யாததால் புதுதில்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை அன்று இரவு ஏற்பட்ட கூட்ட நெரிச லில் 18 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வன்முறை பூமியாக...
கும்பமேளா செல்வதற்காக நாட்டில் கான்பூர் (தில்லி மார்க்கம், வடக்கு, மேற்கு மாநிலப் பகுதி கள்), ஜபல்பூர் (தெற்கு, தென் மேற்கு மாநிலப் பகுதிகள்), மிர்சாபூர் - முகல்சாராய் (கிழக்கு, வடகிழக்கு), மிர்சாபூர் - வார ணாசி (கிழக்கு, வடகிழக்கு, தென் கிழக்கு) உள்ளிட்ட மிக முக்கிய ரயில் வழித்தடங்களிலும், சுல்தான் பூர், வாரணாசி, பிரதாப்கர், ஜான்சி, குவாலியர், கோரக்பூர் உள்ளிட்ட துணை ரயில் வழித்தடங்களிலும் கும்பமேளா நடைபெறும் அலகாபாத் நகரை சென்றடைய லாம். மோடி பிரதமர் ஆன பின்பு ஒன்றிய அரசின் தவறான பொருளா தாரக் கொள்கையால் மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. இதன்காரணமாக கும்பமேளா செல்வோர் ரயில்களின் சாதாரண முன்பதிவில்லா பெட்டிகளில் மட்டுமே பயணித்து வருகின்றனர். இதனால் ரயில்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.
கல்வியறிவு இல்லாததால்...
வடமாநிலங்களில் போதுமான அளவில் கல்வியறிவு இல்லாத தால் முன்பதிவு இல்லாமல் பய ணிக்க முடியாது என்ற விதியை மக்கள் உணர்ந்து கொள்ள வில்லை. இதனால் தில்லியைப் போன்று கும்பமேளா வழித்தடங்க ளில் நாள்தோறும் கூட்ட நெரிசல் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த வாரம் பீகார், உத்தரப்பிரதேச மாநி லத்தின் சில பகுதிகள், ஜார்க்க ண்ட், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் ரயில் நிலையங்களில் இருக்கை கிடைக்காததால் ரயில் பெட்டிகள் அடித்து நொறுக்கப்பட்டன. சில இடங்களில் பயணிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. குறிப்பாக பீகார், உத்தரப்பிரதே சத்தில் இருக்கை கிடைக்காத தால் குளிர்சாதன பெட்டிகளின் கண் ணாடிகள் சுக்கு நூறாக நொறுக் கப்பட்டன. இந்த சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் காயம டைந்தனர். இத்தகைய சம்பவங் கள் மூலம் கும்பமேளா ரயில் வழித்தடங்கள் வன்முறை பூமி யாக மாறியுள்ளது.