tamilnadu

img

கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் காரல் மார்க்ஸ் பிறந்த நாள் விழா

கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் காரல் மார்க்ஸ் பிறந்த நாள் விழா

தஞ்சாவூர், மே 5-  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில், மாமேதை காரல் மார்க்ஸ் பிறந்த நாள் விழா, சிஐடியு கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.  ஒரத்தநாடு சிபிஎம் நகரச் செயலாளர் ஜான் பீட்டர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, சங்க உறுப்பினர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கினார்.  இதில், கட்டுமான சங்க  மாவட்டக்குழு உறுப்பினர் தேவேந்திரன், ஒரத்தநாடு சிஐடியு நகரப் பொறுப்பாளர் ஏ.வெங்கடேசன், தமுஎகச கிளைச் செயலாளர் வசந்தகுமார், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் அய்யப்பன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.