ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களவை இடைத்தேர்தல்
ஸ்ரீநகர், செப். 24 - ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் காலியாக உள்ள 5 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்த லை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, இரு மாநிலங்களுக்கும் அக்டோபர் 6 அன்று வேட்புமனுத் தாக்கல் துவங்குகிறது. அக்டோபர் 24 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அக். 1 முதல் ஆதார் கட்டணம் உயருகிறது!
சென்னை, செப். 24 - ஆதார் அட்டை சேவைகளுக் கான கட்டணம் அக்டோபர் 1 முதல் உயர்கின்றன. இதன்படி ஆதாரில் பெயர், முகவரி மாற்றம் செய்வ தற்கான கட்டணம் ரூ. 50-ல் இருந்து ரூ. 75-ஆக உயர்த்தப்படுகிறது. பயோமெட்ரிக் மாற்றம் செய்ய கட்டணம் ரூ. 100-ல் இருந்து ரூ.125-ஆக உயர்த்தப்படுகிறது. புதிய ஆதார் பெற விண்ணப்பிப் போருக்கு கட்டணம் இல்லை. இந்த கட்டண உயர்வு 2028 செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்
சென்னை, செப். 24 - பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசார ணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கை செம்பியம் போலீசார் நியாயமாக விசாரிக்கவில்லை என்று கூறி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளரும் ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனு வை ஏற்று நீதிமன்றம் இந்த உத்தர வை பிறப்பித்துள்ளது. இவ்வழக்கில் 6 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐ-க்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லே-யில் வன்முறை: போராட்டங்களுக்கு ஒன்றிய அரசு தடை
லே, செப். 24 - லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து அளிக்க வலி யுறுத்தி தலைநகர் லே-யில், பாஜக அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது உருவாக்கப்பட்ட வன்முறையில், பாஜக அலுவல கம் மற்றும் அப்பகுதியிலிருந்த வாக னங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பின்னர் இந்த போராட்டம் - வன்முறையையே காரணமாக காட்டி, லடாக்கில் போராட்டங்கள் நடத்துவதற்கு ஒன்றிய பாஜக அரசானது தடை விதித்துள்ளது. லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், கடந்த செப்டம்பர் 10 முதல் காலவரை யற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.