தாய்மை அடையும் சிறுமிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
ண்டும் 200-300 வரையிலான குழந்தை திருமணங்கள் தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதுபோல் மாவட்டத்தில் மகப்பேறு புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் 19 வயதுக்குள் தாய்மைப்பேறு அடையும் சிறுமிகளின் எண்ணிக்கை ஆண்டு க்கு சுமார் 700 முதல் 800 வரை உள்ளது. குறிப்பாக கடந்த ஓராண்டில் மட்டும் மாவட்டத்தில் 150 குழந்தை திருமணங்கள் கண்டறியப்பட்டு, அதில் 105 திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 45 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன. இதுதொடர்பாக 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த 2023ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் 118 குழந்தை திருமணங்கள் தொடர்பாக புகார் பெறப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 18 வயது பூர்த்தியடையாமல் கருவுற்ற பெண் குழந்தைகள் தொடர்பாக 405 குழந்தைகளின் விவரங்கள் பெறப்பட்டுள்ளன.