சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசன் வலியுறுத்தல்
சுங்குவார்சத்திரம், செப்.10 - பெரும்பான்மை சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் வலியுறுத்தி உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்கு வார்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் சாம்சங் தொழிற்சாலையில் இரண்டாவது நாளாக காலவரை யற்ற வேலைநிறுத்தப் போராட்டத் தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை சந்தித்த பின் அ.சவுந்தரராசன் பேசி யதாவது: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்கு வார்சத்திரத்தில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் 1700 பணியா ளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனம் மிகப்பெரிய அளவில் லாபம் ஈட்டக்கூடியது. இந்நிறுவனத்தில் கடந்த 17 ஆண்டுகளாக தொழிற்சங்கம் இல்லாமலே தொழிலாளர்கள் பணி புரிந்து வந்துள்ளனர். தொழிலாளர் களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட ஏராளமான உரி மைகள் வழங்கப்படாமல் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் ஒரு இறுதிப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம். இந்நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை தயாரிக்கும் தொழிற் சாலையில் வழங்கப்படும் ஊதியத் தைகூட, இந்த தொழிலாளர்களுக்கு வழங்குவது இல்லை என்பது மிகப்பெரிய அநீதி. இதுகுறித்து தொழிலாளர் கேட்டால், நிர்வாகம் அதை மறுத்து, தொடர்ந்து தொழி லாளர்களுக்கு பணிச் சுமையை வழங்கி வந்துள்ளது.
இந்த நிலைமையை இதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற நிலையில், தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை அமைத்துள்ள னர். தொழிற்சங்கம் என்ற சட்ட உரி மையை கையில் எடுத்து, தற்போது போராடி வருகின்றனர். மாறாக தொழிலாளர்கள், தொழிற்சாலைக் குள் சட்ட விரோதமாகவோ, வன் முறையாகவோ எதையும் செய்ய வில்லை. தொழிற்சங்கம் அமைத்து பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர். அதன் அடிப்ப டையில் அவர்கள் விரும்பிய சிஐடியு சங்கத்தை அமைத்துள்ளனர். அப்படி அமைக்கப்பட்ட சங்கத்தை நிர்வாகம் ஏற்க மறுத்து, சங்கத்தையே ஒழித்து விடுவேன் என்ற நிலையை கடைப்பிடித்து வரு கிறது. மேலும் மாற்று சங்கத்தை ஏற்படுத்தி, தொழிலாளர்களை அதில் இணையும்படி நிர்ப்பந்தம் செய்கிறது. மேலும் சங்க நிர்வாகி களை மிரட்டுவது, இடமாற்றம் செய்வது, தனிமை சிறையில் அடைப் பது போல் நடத்துவது உள்ளிட்ட பல கொடுமைகளை சாம்சங் நிர்வாகம் செய்து வருகிறது. இது போன்ற காரணங்களால் தான், வேறு வழியின்றி தற்போது தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சாலையில் பணி செய்யும் 1700 பேரில், 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலமே போராடும் தொழி லாளர்களின் நியாயங்களை புரிந்து கொள்ள முடியும். நியாயமான கோரிக்கைகளுக் காக போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அரசு நிர்வாகம் இருக்க வேண்டும். மாறாக, அரசு நிர்வாகம் சாம்சங் தொழிற்சாலை நிர்வாகத் திற்கு ஆதரவாக செயல்பட்டு வரு கிறது. இது நியாயமான போக்கு இல்லை; இதை ஏற்க முடியாது. பெரும்பான்மை சங்கத்துடன் தொழிற்சாலை நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என அரசு வலியுறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், சங்கம் அமைத்து அச்சங்கத்தை பதிவு செய்ய அரசு அனுப்பினால், அதை தடுக்கும் வேலையையும் சாம்சங் நிறுவனம் செய்து வரு கிறது. இதை பகிரங்கமாகவே தொழிற் சாலை நிர்வாகம் தெரிவிக்கிறது. இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தை முடிவுக்கு வர வேண் டும் என்றால், தொழிற்சங்கத்தை நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். தொழிலாளர்களின் பிரச் சனை குறித்து தொழிற்சங்கத்துடன் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பழிவாங்கும் நடவடிக் கையை கைவிட வேண்டும். இப்பிரச்சனையில் தொழிலாளர் நலத்துறை உடனடியாக தலையிட வேண்டும். காவல்துறை தலையிடக் கூடாது. எனவே தமிழக அரசு இப்பிரச்சனைக்கு உடனே சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.