தேனி, செப். 9 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு தேனியில் நடை பெற்றது. புதிய பென்சன் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், 6 லட்சம் காலிப்பணி யிடங்களை நிரப்பிடக்கோரியும், சத்துணவு- அங்கன்வாடி, வருவாய்கிராம உதவியாளர், ஊர்புற நூலகர்கள், எம்.ஆர்.பி.செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு கால முறை ஊதியம், தொகுப்பூதியம் பெறுபவர் களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம், ஓய்வூதியம், சாலைப்பணியாளர்களுக்கு 41 மாத காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். அரசுத்துறைகளில் உள்ள கொத்த டிமை கூலி முறைகளை ரத்துசெய்து நிரந்தர ஊழியர்களை நியமித்தல், முடக்கப்பட்ட சரண் விடுப்பு ஊதியம் உடன் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறது. ஆனால், திமுக அரசு வாக்குறுதிப்படி, இக்கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதைத் தனது தீர்மானத்தில் சுட்டிக்காட்டி யுள்ள மாநில செயற்குழு, கோரிக்கை களை வென்றெடுக்கவும் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி யும் தமிழகம் முழுவதும் அனைத்து அலுவலகங்களிலும் 19.09.2024 பெருந்திறள் முறையீடு நடத்திடுவது, 08.10.2024 அன்று மாவட்ட தலைநகரங்களில் மாலை நேர தர்ணா போராட்டத்தை நடத்த திட்டமிடுவது எனத் தீர்மானித்துள்ளது. மாநில மாநாடு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 15வது மாநில மாநாட்டை வருகிற டிசம்பர் மாதம் 13 மற்றும் 14 தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்திடுவது எனவும், மாநில மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை அழைப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில் மாநிலத்தலைவர் சா.டானியல் ஜெயசிங், பொதுச்செயலாளர் ஆ.செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.