புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொட்டியம் வட்டக் குழு சார்பில் திங்களன்று வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறது. . தொட்டியம் வட்டத்தில் அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டா நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும். அதை கிராம கணக்கில் பதிவு செய்ய வேண்டும். காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் 1995 இல் தாழ்த்தப்பட்டோருக்கு சமூக நலத்துறையால் நிலம் கையகப்படுத்தியதை தகுதியானவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இடியும் நிலையில் உள்ள நத்தம் கிராம நிர்வாக அலுவலகத்தை புதுப்பிக்க வேண்டும்.
அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க பெறாதவர்களுக்கு உடனே வழங்க வேண்டும். நிறுத்தப்பட்ட முதியோர் உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் ராமநாதன், மூத்த தோழர் முருகன், வரதராஜன் ஆகியோர் பேசினர். இதில் சத்தியமூர்த்தி, முருகானந்தம், தர்மலிங்கம், சின்னதுரை, தேவராஜ், சுந்தரம், மல்லிகா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.