வாய்ப்பு வாசல்
பொதுத்துறை வங்கிகளில் 10,277 பணியிடங்கள்
2011 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தவறா மல் வங்கிகளில் உள்ள காலிப்பணியி டங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. நடப் பாண்டிலும் அதற்கான தேர்வு நடக்க வுள்ளது. பணியிடங்களை நிரப்புவதற் கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 10,277 பணியிடங்க ளை நிரப்பப் போகிறார்கள். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 894 பணியிடங் கள் நிரப்பப்படுகின்றன. இதில் இட ஒதுக் கீடு இல்லா இடங்கள் 391, எஸ்.சி. பிரிவி னருக்கு 183, எஸ்.டி. பிரிவினருக்கு 5, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஓபிசி) 227, முற்பட்ட பிரிவினரில் பொரு ளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு 88 என்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கல்வித்தகுதி - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டப் படிப்பு. வயது வரம்பு - குறைந்தபட்ச வயது 20 ஆகவும், அதிகபட்சமாக 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான வயது வரம்பு தளர்ச்சி, அரசு விதிமுறைகளின்படி வழங்கப்படும். தேர்வு முறை - முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படும். ஆன்லைன் வழியாக நடத்தப்படும் இந்தத் தேர்வுகளில், முதல்நிலைத் தேர்வு அக்டோபர் மாதம் நடைபெறும். இதன் முடி வுகள் நவம்பரில் வெளியிடப்பட்டு, அதே மாதத்தில் முதன்மைத் தேர்வு நடை பெறும். இறுதி முடிவுகளும், வங்கிகள் ஒதுக்கீடும் மார்ச் 2026இல் தெரிய வரும். ஆங்கில மொழிப்பிரிவைத் தவிர, மற்ற பிரிவுகளை தமிழ்மொழியில் எழுத லாம். வினாக்கள் தமிழ்மொழியிலும் தரப்படும். தேர்வுக்கான பாடத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை www.ibps.in என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி ஆகஸ்டு 21, 2025.
அரசு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணி
ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பொ துத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவ னமான ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவ னத்தில் 500 உதவியாளர் பணியிடங்க ளை நிரப்பப் போகிறார்கள். கல்வித்தகுதி - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டப் படிப்பு. வயது வரம்பு - 21 வயது முதல் 30 வயது வரையில் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதி முறைகளின்படி வயது வரம்பில் தளர்ச்சி வழங்கப்படும். தேர்வு முறை - இரண்டு கட்டங்களா கத் தேர்வுகள் நடத்தப்படும். முதல் நிலைத் தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மைத் தேர் வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு நியமனங்கள் மேற்கொள்ளப்படும். இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு www.orientalinsurance.org.inஎன்ற இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
ஐடிஐ படித்தவர்களுக்கு கான்ஸ்டபிள் பணி காலியிடங்கள் 3588
ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எல்லைப் பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் பணிக்கு 3, 588 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அத னுடன் ITI தொழிற்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் இரண்டு ஆண்டுகள் படித்தி ருக்க வேண்டும். அதனுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். வயது வரம்பு : குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சமாக 25 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓபிசி(இதர பிற்படுத்தப்பட்ட) பிரிவின ருக்கு 3 ஆண்டுகள், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரை யில் வயது வரம்பில் தளர்வு தரப்படும். தேர்வு முறை : பல்வேறு கட்டங்க ளாகத் தேர்வுகள் நடைபெறும். எல்லைப் பாதுகாப்புப் படையால் நடத் தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, உடற் திறன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத் துவ மற்றும் சான்றிதழ் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதி யானவர்கள் பணிக்கு தேர்வு செய் யப்படுவர். பத்தாம் வகுப்பு தகுதி அடிப்ப டையில் கேள்விகள் கேட்கப்படும். உடன் திறன் தேர்வில் ஆண்கள் 5 கிலோ மீட்டர் தூரத்தை 24 நிமிடங்களி லும், பெண்கள் 1.6 கிலோ மீட்டர் தூரத்தை 8.30 நிமிடங்களிலும் ஓடி முடிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: பொ துப்பிரிவினர், முற்பட்ட பிரிவினரில் பொருளாதார ரீதியாக நலிவடைத்தவர் கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரி வினர் ஆகியோர் ரூ.150 மட்டும் செலுத்தி விண்ணப்பிக்கலாம். பெண் கள், எஸ்சி எஸ்டி பிரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. தேர்வுக்கான பாடத்திட்டம், மாநில வாரியானகாலிப்பணியிடங்கள் மற்றும் கூடுதல் விபரங்கள் அறிவிக்கையில் தரப்பட்டுள்ளன. முழுமையான அறி விக்கையைப் பெற https://rectt. bsf.gov.in/என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிக்கக் கடைசித்தேதி ஆகஸ்டு 23, 2025.