திரிபுராவில் மக்கள் பிரச்சனையை திசை திருப்ப ‘போராட்ட’ நாடகம் சிபிஎம் கடும் கண்டனம்
திரிபுராவில் பாஜக ஆட்சி நடை பெற்று வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு சிறப்பு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பழங்குடியின மக்கள் அறிவித்த 24 மணி நேர முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக கூட்டணிக் கட்சியான திப்ரா மோதா ஆதரவு அளித்து. பழங்குடியின மக்கள் போராடியதே பாஜக அரசை கண்டித்து தான். ஆனால் பாஜக கூட்டணியில் இரு ந்து கொண்டே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, முழு அடைப்பில் பங்கேற்ற தற்கு மாநிலத்தின் எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், திரிபுரா எதிர்க்கட்சித் தலைவருமான ஜிதேந்திர சவுத்ரி கூறு கையில்,“பாஜக-திப்ரா மோதா கூட்டணி வித்தியாசமானது. ஒரு திருமணமான தம்பதி போன்று சண்டை போடும், ஒன்றாக இருக்கும். திரிபுரா மாநிலத்தில் வேலையின்மை, பொருளாதார தேக்கம் மற்றும் மோசமான சட்டம்-ஒழுங்கு போன்ற உண்மையான பிரச்சனைகள் மிக மோசமாக உள்ளன. மக்களின் பிரச்ச னையை திசை திருப்ப மற்றும் பாஜக அரசாங்கத்தின் செயலற்ற தன்மையை மறைக்கவே முழு அடைப்பு போராட்டத் திற்கு பாஜக கூட்டணிக் கட்சியான திப்ரா மோதா ஆதரவு அளித்தது. இந்த போராட் டத்தின் போது மருத்துவர்கள் பணியில் இருந்து தடுக்கப்பட்டனர். முதலமைச்சர் உட்பட பெரும்பாலான அமைச்சர்கள் வேலைநிறுத்த நாளில் தலைமை செயல கத்தில் இல்லை” என அவர் குற்றம் சாட்டினார்.
