tamilnadu

img

சிபிஎம் சிவகங்கை மாவட்ட மாநாடு எழுச்சியுடன் தொடங்கியது

சிவகங்கை, நவ.30-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சிவகங்கை மாவட்ட மாநாடு சிவகங்கையில் சனிக்கிழமையன்று தொடங்கியது. மாவட்ட குழு உறுப்பி னர் கே. அழகர்சாமி செங்கொடி ஏற்றி னார். பின்னர், தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்  எஸ். சுரேஷ் அஞ்சலி தீர்மானங்களை வாசித்தார். வரவேற்பு குழு தலைவர் பி. விசுவநாதன் வரவேற்றுப் பேசினார். மாவட்டச் செயலாளர் (பொறுப்பு) வி.கருப்புச்சாமி அரசியல் ஸ்தாபன அறிக்கை சமர்ப்பித்து பேசினார். தீர்மானங்களை முன்மொழிந்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. வீரபாண்டி பேசினார்.  முன்னதாக சிபிஎம் மாவட்டச் செயலாளராக இருந்ததோழர் ஆர்.கே.  தண்டியப்பன் நினைவாக கொடிக்  கம்பம் திருப்புவனத்தில் இருந்து  மாநாட்டு அரங்கிற்கு கொண்டு வரப்பட்டது. திருப்புவனம் ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் கொடிக்கம்ப பயணத்தை மாவட்டக் குழு உறுப்பினர் அய்யம்பாடி துவக்கி  வைத்தார். மாநாட்டு அரங்கில் மாவட்டக் குழு உறுப்பினர் எம். சக்தி வேல் கொடி கம்பத்தை எடுத்து கொடுக்க மாவட்டக் குழு உறுப்பினர் சாந்தி பெற்றுக் கொண்டார்.  சிவகங்கையில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினராக செயல் பட்ட பி. தமயந்தி நினைவு ஜோதி பயணம் ஒன்றிய செயலாளர் ஜி.  உலகநாதன் தலைமையில் மாவட்டக்  குழு உறுப்பினர் எஸ். சண்முகப்பிரியா  தொடங்கி வைக்க மாவட்டக் குழு  உறுப்பினர் எஸ். உமாநாத் ஜோதியை  எடுத்துத் தர மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர், மணியம்மா பெற்றுக் கொண்டார்.   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தோழர் ஜி. ரங்கசாமி, எல்ஐசி முகவர் சங்கத்தின் தலைவ ராக செயல்பட்ட கே. சந்திரன் ஆகியோ ரின் நினைவு ஜோதியை மானாமதுரை யிலிருந்து ஒன்றியச் செயலாளர் ஆர்.  முனியராஜ் எடுத்து வர மாவட்டக் குழு உறுப்பினர் எ. விஜயகுமார் துவக்கி வைக்க மாவட்டக் குழு  உறுப்பினர் பி. ஆண்டி, நினைவு  ஜோதியை வழங்க மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ். முத்துராமலிங்க பூபதி பெற்றுக்கொண்டார்.  தேவகோட்டையில் இருந்து தோழர்கள் பி .என். ரவிக்குமார், ஏ. எம்.  வீரமாகாளி ஆகியோரின் நினைவு ஜோதி பயணத்தை தாலுகா செயலா ளர் வி. செல்வராஜ் தலைமையில் மாவட்டக் குழு உறுப்பினர் எ. பொன்னுச் சாமி தொடங்கி வைக்க மூத்த தோழர்  ஏ. ஆர். கே. மாணிக்கம் ஜோதியை தர மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் பெற்றுக் கொண்டார்.  காரைக்குடியில் இருந்து தோழர்கள் எம். காசிநாதன், எம்.  சுந்தர்ராஜன் ஆகியோரின் நினைவு ஜோதியை காரைக்குடி தாலுகா செய லாளர் கே .ஆர்.அழகர்சாமி தலைமை யில் மாவட்டக் குழு உறுப்பினர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஏ. இளைய ராஜா தர மூத்த தோழர் பி. சித்திர வேலு தொடங்கி வைக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் எ. சேதுராமன்  பெற்றுக் கொண்டார்.  தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பின் மாநாடு தொடங்கி யது. சிவகங்கை மாவட்ட மாநாட்டை மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார்.  ஞாயிறன்றும் மாநாடு நடைபெறு கிறது. மாநில குழு உறுப்பினர்கள் எஸ்.கே. பொன்னுத்தாய், எஸ். ஸ்ரீதர்  மாநாட்டில் பங்கேற்று உரையாற்று கிறார்கள்.