ஒப்பந்த தொழிலாளர் முறையை அகற்ற தொடர் போராட்டம்
திருவண்ணாமலை, செப்.20 - ஒப்பந்த தொழிலாளர் முறையை அகற்ற தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டும் என்று குடிநீர் வடிகால் வாரி யத் தொழிலாளர்களுக்கு தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் 12ஆவது மாநில மாநாடு திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் சனிக்கிழமை (செப்.20) தொடங்கியது. இந்த மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் ஏ.புருஷோத்தமன் தலைமை வகித்தார். உதவித் தலைவர் வி. அழகு மலை கொடியேற்றினார். உதவித் தலைவர் ஆர். மருதை ராசு அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்புக் குழுத் தலைவர் வி.எம். வெங்கடேசன் வரவேற்றார். மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றிய சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர் திருச்செல்வன், “உலகில் இஸ்ரேல், ரஷ்யா நாடுகள், பல்வேறு நாடுகள் மீது போர்த் தாக்கு தல் நடத்தி வருகிறது. தாக்குதல் நடத்தும் நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. மோடி அரசின் நவீன தாராளவாத கொள்கைகள் காரணமாக ஒப்பந்த தொழிலாளர்கள் பெருகி வருகிறார்கள். எனவே, ஒப்பந்த தொழிலாளர் முறை யை அகற்றும் வகையில் அரசுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. முன்னோர்கள் போராடி பெற்ற தொழிலாளர் நல உரிமைகள், ஒன்றிய மோடி அரசின் புதிய சட்ட தொகுப்புகளால் கேள்விக் குறியாகி உள்ளதாக அவர் குறிப்பிட் டார். அத்தகைய சட்டங்கள் நடை முறைக்கு வந்தால் 70 சதவீத தொழி லாளர்கள் வேலையில் இருந்து அப்புறப் படுத்தப்படுவார்கள் என்றும் எச்சரித்தார். மாநில பொதுச் செயலாளர் மா. ஆத்மநாதன் வேலை அறிக்கையை யும், பொருளாளர் பி. குணசேகரன் நிதி நிலை அறிக்கையையும் வாசித்தனர். சிஐடியு நிர்வாகிகள் கே. நாகராஜன், பெ.கண்ணன், கே.காங்கேயன், இரா.பாரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர். மத்திய அமைப்பு மாநிலத் துணைத் தலைவர் கே.செல்வம், நிர்வாகிகள் ஆர். சரவணன், சோணை கருப்பையா, பாலாஜி, அரவிந்த், பிரகாசம், சிவ பெருமாள், சங்கர், பெலிக்ஸ், பஞ்சாட்ச ரம், மாவட்டத் தலைவர் இ. பிரகாசம், பொருளாளர் எம். சலோமி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை (செப்.21) நிறைவடைகிறது. முன்னதாக செய்யாறு பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜாஜி பூங்காவில் இருந்து நடைபெற்ற பேரணியில் ஏராளமான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.