திண்டுக்கல், செப்.5- திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் ஏ.பாலசுப்ரமணி யத்தின் 41-ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கட்சியின் மாவட்டக் குழு அலு வலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீக்கதிர் முதன்மை பொதுமேலாளர் என்.பாண்டி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் வ.கல்யாணசுந்தரம், பி.ஆஸாத், கே.ஆர்.பாலாஜி, முகேஷ், நகரச் செயலாளர் ஏ.அரபு முகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். பேகம்பூரில் உள்ள சிஐடியு மாவட்டக் குழு அலுவலகத்தில் உள்ள ஏ.பாலசுப்ரமணியம் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. சிஐடியு மாவட்டத்தலை வர் கே.ஆர்.கணேசன், மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன், பொரு ளாளர் தவக்குமார், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர்கள் வ.கல்யாண சுந்தரம், எம்.ஆர்.முத்துச்சாமி, பி.ஆஸாத், நகரச் செயலாளர் ஏ.அரபுமுகமது, சிபிஎம் மாமன்ற கவுன்சிலர் கே.எஸ்.கணேசன், என்.பாண்டியன் (ஆட்டோ), கோபால் (டாஸ்மாக்), வளர்மதி (பொது தொழிலாளர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். (நநி)