tamilnadu

img

அனைத்துத் துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

சென்னை, செப். 13- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாயன்று (செப்.13) அரசுத்துறை செயலாளர்க ளுடன் விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.  சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த இந்தக் கூட்டத்தில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, பொதுத் துறை செயலாளர் ஜெகநாதன், உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி  உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் துறை செயலாளர்கள் முரு கானந்தம் (நிதித்துறை), ராதா கிருஷ்ணன் (கூட்டுறவு, உணவுப் பொருள் பாதுகாப்பு ), அமுதா (ஊராட்சி கள்), சமயமூர்த்தி (வேளாண்மை), கார்த்திகேயன் (உயர்கல்வி), காகர்லா  உஷா (பள்ளிக்கல்வி),குமார் ஜெயந்த்,   (வருவாய்) அபூர்வா (இளைஞர் நலன் விளையாட்டு) உள்பட 35-க்கும்  மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் “ஒவ்வொரு துறை வாரியாக செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து துறை செயலாளர்கள் விரிவாக  எடுத்துரைக்க வேண்டும் என்றும், இதுவரை எந்த அளவுக்கு பணிகள் நடைபெற்றுள்ளன என்பது குறித்தும் கேட்டறிந்தார். பட்ெஜட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடு எந்த அளவு  உள்ளது. தற்போதைய நிலை என்ன? என்பது பற்றியும் கேட்டறிந்தார். மக்க ளுக்கான திட்டங்களை விரைந்து முடிக்க பணிகளை துரிதப்படுத்த வேண் டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் எத்தனை திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்பதையும் அவர் ஆய்வு செய்தார். பின்னர் துறைவாரியாக ஒவ்வொரு செயலாளர்களும் விரிவாக விளக்கம் அளித்து பேசினர்.