தலைமைச் செயலாளர் ஆலோசனை
சென்னை: தமிழ்நாட்டுப் பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை தலை மைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ஜெய ராம், டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் துறை சார்ந்த அதிகாரி கள் கலந்து கொண்டனர். மேலும் இது தொடர்பான புகார் எழுந்தால் துறை அதிகாரிகள் எடுக்க வேண்டிய நடவடிக் கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அமைச்சர் - கமல்ஹாசன் சந்திப்பு
சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹா சனை அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சந்தித்துப் பேசினார். வரும் ஜூலை மாதம் மாநிலங்களவைக்கு நடை பெறவுள்ள தேர்தலில் திமுக சார்பில் கமலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
கல்வியை காவிமயமாக்குவதா?
சென்னை: சென்னையில் ‘அகத்திய முனிவர் நடை பயணம்’ என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்கு அகத்தியர் வேடமிட்டு நடைபயணம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் கல்வியை காவிமயமாக்கும் பாஜகவின் சதி இது என்று திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வருவாய் அதிகாரிகள் சஸ்பெண்ட்
விருதுநகர்: சாத்தூர் அருகே இ.குமாரலிங்கபுரத்தில் கனிமவளக் கொள்ளை விவகாரத்தில் 4 வருவாய்த்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கனிமவளக் கொள்ளையை தடுக்க தவறியதாக சாத்தூர் வட்டாட்சியர், 4 வருவாய்த்துறை அதிகாரிகள், நீர்வளத் துறை உதவி பொறியாளர், உதவி வேளாண் அலுவலர் என 7 பேரை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார். நகராட்சிகளாக தரம் உயர்வு சென்னை: ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளை
நகராட்சிகளாக தரம் உயர்த்தி
அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 3 பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்த உத்தேச முடிவு செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியானது. மக்களின் கருத்துகளை பரிசீ லனை செய்து 3 பேரூராட்சிகளையும் நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசிதழில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல்
மதுரை: 2011-இல் ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஜன் ஆக்சைடு வாயு ஏற்றிய சம்பவத்தில், இளம்பெண் உயி ரிழந்தது தொடர்பான வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி, மருத்துவர் ரவீந்திரன் உள்ளிட்ட 6 பேர் உயர்நீதி மன்ற மதுரை அமர்வில் முறையீடு செய்தனர். இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “மருத்துவர்கள் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் பணி யாற்ற வேண்டும். மருத்துவர்கள் உயிரை காப்பாற்று வார்கள் என நம்பி மருத்துவர் சொல்வதை நோயாளிகள் கேட் கின்றனர்” என அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்தார்
பஞ்சாமிர்தத்துக்கு தட்டுப்பாடு
பழனி: தைப்பூசத்தையொட்டி பழனிக்கு லட்சக்கணக் கான பக்தர்கள் சென்று வருகின்றனர். அங்கு செல்லும் பக்தர்கள் அறநிலையத்துறை சார்பில் விநியோகிக்கப்படும் தேவஸ்தான பஞ்சாமிர்தத்தை வாங்கிச் செல்வது வழக்கம். இந்நிலையில், பல இடங்களில் பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு நிலவுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், பக்தர்கள் அருகில் உள்ள தனியார் கடைகளில் பஞ்சாமிர்தத்தை வாங்கிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
வனத்துறைக்கு உத்தரவு
சென்னை: நீலகிரியில் பழங்குடி மக்களின் மேய்க்கால் நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றி தனியார் ஆக்கிர மித்துள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணை யில், 70% நிலம் பழங்குடியினர் அல்லாதவர்களால் பயன்படுத் தப்பட்டு வருகிறது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித் தனர். மேலும், மேய்க்கால் நிலங்கள் விவசாய நிலமாக மாற்றப்படவில்லை என்பதை வனத்துறை உறுதிசெய்து, இது குறித்து நீலகிரி ஆட்சியர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வும் உத்தரவிட்டு வழக்கை மார்ச் 7-க்கு ஒத்திவைத்தனர்.
தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்
சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துவதற்கு முன்பு விதிக்கப்பட்டி ருந்த தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதி மன்றம், கட்சியின் சின்னம் ஒதுக்கீடு சட்டத்தின்படி தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொள்ளலாம் என தெரிவித் துள்ளது.