tamilnadu

img

மதுரை மாநாட்டை நோக்கி புறப்படுகிறது செம்படை...

மதுரை மாநாட்டை நோக்கி புறப்படுகிறது செம்படை...

செந்தொண்டர் அணிவகுப்பு ஒத்திகை

ஏப்ரல் 6 அன்று மதுரையின் வீதிகளை அதிர செய்ய உள்ள மாபெரும் செந்தொண்டர் அணி வகுப்பின் ஒத்திகை, பகத்சிங் நினைவுகளை நெஞ்சில் ஏந்திய வாறு, தமிழ்நாடு முழுவதும் எழுச்சி யுடன் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 24 ஆவது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2-6 தேதிகளில் மதுரை யில் பிரம்மாண்டமான முறையில்  நடைபெறவுள்ளது. மறைந்த பொதுச் செயலாளர் தோழர் சீத்தா ராம் யெச்சூரி பெயரில் அமைய வுள்ள நகரில் (தமுக்கம் மைதானம்) துவங்கும் இம்மாநாட்டின் முத் தாய்ப்பாக ஏப்ரல் 6 அன்று மாலை 3 மணியளவில் மதுரை தெப்பக்குளம் அருகிலிருந்து பிரம்மாண்ட செந்தொண்டர் அணி வகுப்பு பீடுநடை போட இருக்கி றது. இந்த மாபெரும் அணி வகுப்பை இந்திய புரட்சிக்கர போராட்டங்களின் சின்னங்களில் ஒன்றாக முத்திரைப் பதித்துள்ள வாச்சாத்தி போராளிகள் துவக்கி வைக்கிறார்கள். இந்த அணிவகுப்பில் தமிழ்நாடு  முழுவதுமிருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செந்தொண்டர்கள், தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிக் கர சீருடையாம் காக்கி சிவப்பு உடை  அணிந்து செங்கொடிகள் பட்டொளி  வீசி பறக்க மதுரையின் வீதிகளை அதிர வைக்க இருக்கிறார்கள். இந்த மாபெரும் அணிவகுப் பில் பங்கேற்க உள்ள செந்தொண் டர்கள், மார்ச் 23 மாவீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகி யோரின் நினைவு நாளான ஞாயி றன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அணி வகுப்பு ஒத்திகைகளில் ஈடுபட்ட னர். இந்த ஒத்திகை அணிவகுப்பை, மதுரை புறநகர் மாவட்டம் தே. கல்லுப்பட்டியில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், மாநாட்டு வர வேற்புக் குழு தலைவருமான கே. பாலகிருஷ்ணன்; காஞ்சிபுரத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மதுரை மாநகரில் வர வேற்புக் குழு செயலாளரும் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பி னருமான சு.வெங்கடேசன் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் மத்தியக் குழு, மாநிலச் செயற்குழு, மாநி லக் குழு உறுப்பினர்கள் கொடிய சைத்து துவக்கி வைத்து, அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.