tamilnadu

மகாமக குளத்தில் மீண்டும் படகு சவாரி

மகாமக குளத்தில் மீண்டும் படகு சவாரி

சென்னை , ஏப்.23 - கும்பகோணம் மாநகராட்சி என்பது விவசாயிகளும், வணி கர்களும் நிறைந்திருக்கும் பகுதியாகும். இங்கு கோயில் அதிகம் இருக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா வரக்கூடிய இடம் கும்பகோணம். இந்த மாநகராட்சிக்கு  சொந்தமான சேய் குளத்தில் படகு சவாரி விடப்படுமா? என்றும், 1989 ஆம் ஆண்டில் அன்றைய அமைச்சர் கோ.சி. மணியால் கும்பகோணம் மகாமக குளத்தில் படகு சவாரி விடப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றத்தால் நிறுத்தப்பட்டது. எனவே, இந்த பகுதி மக்களின் பொழுபோக்கிற்காக படகு குழாம் அமைத்து படகு சவாரிக்கு ஏற்பாடு செய்யப்படு மா? என்றும் திமுக உறுப்பினர் க.அன்பழகன் செவ்வாயன்று சட்டப்பேரவையில் துணைக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய ராஜேந்திரன், “சுற்றுலாத் துறை அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்து நிதி நிலைமைக்கு ஏற்ப இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.