tamilnadu

img

கட்டுமான நலவாரிய பரிந்துரைகளை ஏற்று அரசாணை வெளியிடுக :​ சிஐடியு

திருப்பூர், ஜூலை 13 - தமிழ்நாடு கட்டுமான​த் தொழிலாளர்​ நல வாரியத்தின் பரிந்துரைகளை ஏற்று அரசாணை வெளியிடுமாறு தமிழக முதல்வருக்கு சிஐடியு கட்டுமான தொழி லாளர் சம்மேளனப் பொதுச் செயலாளரும், கட்டுமானப்​  தொழிலாளர்​ நல வாரிய உறுப்பினருமான டி.குமார் கோரிக்கை விடுத்துள்ளார். ​இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:  35,36,37ஆவது கட்டுமான வாரிய கூட்டத்தில் அரசு தரப்பு பிரதிநிதிகள், தொழில் நடத்துனர், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, தொழிலாளர்களுக்கு பயனுள்ள கோரிக்கைகளை முன்வைத்தது. முத்தரப்பு கமிட்டியும் ஏற்றுக் கொண்டு வாரிய கூட்ட முடிவுகளை வாரியத் தலைவர், செயலாளர் மூலம் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டுள்ளது.

பரிந்துரைக்கப்பட்டுள்ள கோரிக்கைக ளுக்கு கால தாமதமில்லாமல் அரசாணை வெளியிட்டு உதவ வேண்டுகிறோம். மேலும் மற்ற தொழிலாளர் கோரிக்கைகளையும் சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும். ​குறிப்பாக, மாத ஓய்வூதியத்தை ரூ.2 ஆயிரம் என உயர்த்தி வாரியம் முடிவு செய்ததை விரைந்து அமல்படுத்த வேண்டும். ரூ. 3 ஆயிரமாக ஓய்வூதியத்தை அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  60 வயது நிறைவடைந்த நாள் முதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கால​ ​தாமதமானால் நிலுவைத் தொகையுடன் ஓய்வூதியம் கணக்கிட்டு வழங்க வேண்டும்.  பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ​ஓய்வூதியம் வழங்குவதோடு, மாத​ந்தோறும் 10ஆம் தேதிக்குள்​ ஓய்வூதியம் ​கிடைக்கச் செய்ய வேண்டும். ​ஓய்வூதியம் பெறும் தொழிலாளி இறந்து போனால் அவரது குடும்பத்திற்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை வழங்க வேண்டும். புதுப்பித்தல் விண்ணப்பத்தில் தொழிற் சங்க நிர்வாகிகளில் ஒருவர் பணிச் சான்று அவசியம் வழங்க வேண்டும் என்று படிவம் திருத்தம் செய்யப்பட வேண்டும். விபத்து மரணம் மற்றும் இயற்கை மரணம் நேரும் நிகழ்வுகளில் வாரியத்தால் வழங்கப்படும் உதவித்தொகைகள் எக்கார ணம் கொண்டும் 30 நாட்களுக்குள் தொழிலா ளியை இழந்த குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும்.​

மருத்துவக் காப்பீடு 

தீபாவளிக்கு பண்டிகைக்கால போனஸ் ரூபாய் 5000 ஒரு மாத காலத்திற்கு முன்பாக வழங்கிட வேண்டும்​. விபத்து எங்கு நடந்து இறந்தாலும் ரூபாய் 5 லட்சம் நிவாரணம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும், ஒன்றாம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொகை வழங்கு வதையும்,​ ​பணியின்போது நடைபெறும் விபத் துக்களால் கை, கால் எலும்பு முறிவு ஏற்படும் ​தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்குவதுடன் கட்டுமான தொழிலாளர்க ளை தமிழக முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைப்பதுடன் இ.எஸ்.ஐ. திட்டத்தையும் அமலாக்கி செயல்படுத்த வேண்டும்.​  ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம் உள்ளிட்ட அனைத்து மனுக்க ளையும் விண்ணப்பிக்க தொழிற்சங்க நிர்வா கிகளின் ஒப்புதல் அளிக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும். திருமண உத வித்தொகை பெறுவதற்கான முதல் திரு மணச் சான்றை சுய சான்றாக வழங்குவதை ஏற்றுக் கொள்வதுடன் இதர சான்றுகளை தொழிற்சங்க நிர்வாகிகள் வழங்கலாம் என்ற அடிப்படையில் மாற்றி அமைத்து, விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பரிசீலனை முடித்து பணப்பயன் வழங்குவதை உத்தர வாதப்படுத்த வேண்டு​ம். வீடு கட்டும் திட்டம் தொழிலாளர்களுக்கு விரைவாக சென்றடை யும் பதிவு காலம் மூன்றாண்டு என்பதை ஒரு ஆண்டாக மாற்ற வேண்டும்.  கட்டிட உரி மையாளர்கள், ஒப்பந்ததாரர்கள், (அ) பொறியாளர்கள் கட்டுமான பணிகள் நடை பெறும் கட்டிடங்களில் தொழிலாளர் இயற்கை உபாதைகளை கழிக்கும் வகையில் தற்காலிக கழிப்பறைகளை ஏற்படுத்தி தருவ தற்கும் மேலும் விபத்துக்கான நிவாரணம் ரூ.5 லட்சத்திற்கும், விபத்து மரணத்திற்​கு ரூ. 10 லட்சத்திற்கும் காப்பீடு செய்து உறுதிப் படுத்தும் கட்டிடங்களுக்கு மட்டுமே (அப்ரூ வல்) ஒப்புதல் வழங்கும் முறையை அம லாக்​க​ வேண்டும். 

கட்டுமான வாரியத்தால் செயல்படுத்தப் படும் நடமாடும் மருத்துவம் திட்டம் உருவாக் கப்பட்டுள்ள​தை நோய் வாய்​ப்​படும் கட்டு மான தொழிலாளர்களுக்கு மருத்துவ உதவி திட்டமாக மாற்ற வேண்டும். ​மாவட்ட வாரிய அலுவலகத்தில் பணி நாட்களில் மதியம் வரை மருத்துவம் பார்ப்பதை உத்தரவாதம்​ செய்வதுடன், அனைத்து நோய்களுக்கு​ம் மருந்துகள் இலவசமாக வழங்கவும் நட வடிக்கை எடுக்க வேண்டும்.  மதியத்திற்கு மேல் கட்டுமான பணி யிடங்களுக்கு செல்வதையும் உத்தரவாத​ப்​படுத்த வேண்டும்​.​ மருத்துவ குழுவை மாவட்ட ஆட்சியர் கண்காணிக்கும் வகையில் திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும். ஆன் லைன் பதிவை முறைப்படுத்த கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்​. 

ஜூலை 18 போராட்டம் 

இ​க்கோரிக்கைகளை​ விரைந்து அம லாக்கி அரசாணை வெளியிட கேட்டு மூன்று கட்ட போராட்டம் நடத்த சம்மேளனக் குழு முடிவு செய்துள்ளது.​  அதன்படி ​ஏற்கெனவே ​ஜூன் 19 ​இ​ல் மாவட்ட ஆட்சியர் மூலமாக அனைத்து மாவட்டக்​ ​குழுக்களும் மனு அளித்துள்ளனர்​. ஜூன் 12 அன்று தமிழக முதல்வர்​ சேலம்​ வருகைதந்த​போது சேலம் மாவட்ட ​சங்க நிர்வாகிகள் நேரில் மனு அளித்துள்ளனர்​. இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை​.​   மாநில அரசு தொடர்ந்து தொழிலாளர் பிரச்சனைகளில் மௌனம் காக்கக் கூடாது. உடனடியாக கோரிக்கைக​ளை​ ​அமல்படுத்த  வலியுறுத்தி​  ஜூலை 18 அன்று அனைத்து மாவட்ட நல​ ​வாரிய அலுவலகங்கள் முன்​பாக தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும்​ தீர்மானிக்கப்பட்டுள்ளது.​

கவன ஈர்ப்பு பேரணி

மேலும் செப்டம்பர் மாதம் 13அன்று சென்னை கோட்டையை நோக்கி கவன ஈர்ப்பு பேரணி நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டு​ள்ளது. கட்டுமானத் தொழிலாளர்கள் வாழ்வா தாரக் ​கோரிக்கை​களை வென்றெடுக்க ஆயி ரக்கணக்கில் தொழிலாளர்கள் ​ ஆர்ப்பாட்டத் திற்கும் சென்னை​ பேரணி​க்கும் அணி திரள வேண்டும்.​ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.