புதிதாக பிறந்த சிசுவின் அழுகைச்சத்தம் தாயின் மூளைக்குள் நரம்பியல் மண்டலத்தில் நியூரான் வலையமைப்பில் தூண்டல்களை ஏற்படுத்தி பால் சுரக்கச் செய்கிறது. சுண்டெலிகளிடம் நடந்த இந்த ஆய்வு குழந்தை பிறப்பதற்கு முன்பும் பின்பும் தாயின் மூளையில் ஏற்படும் அதி நவீன நுண்ணிய மாற்றங்களை எடுத்துக்காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அழும் குழந்தையும் தாயின் பால் சுரப்பும்
சுண்டெலிக் குட்டிகள் தொடர்ச்சியாக 30 விநாடி அழும்போது தாய்ச் சுண்டெலி யின் மூளையில் பால் சுரப்பை கட்டுப் படுத்தும் ஆக்சிடாசின் (Oxytocin) என்ற வேதிப்பொருள் தூண்டப்படுகிறது. “அழும் குழந்தை தாயின் மூளை செயல்பாட்டை தயார் நிலைக்கு கொண்டுவந்து பால் சுரப்பிற்கு ஏற்ற உடல் நிலையை தாயிடம் உருவாக்க இது உதவுகிறது. இத்தகைய தயார் நிலை இல்லாவிட்டால் குழந்தை பால் குடிப்பதற்கும் அதன் சுரப்பிற்கும் இடையில் பல மணி நேர வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் குழந்தை விரக்தி அடைகிறது. தாய்க்கு மன அழுத்தம் ஏற்படுகிறது” என்று நியூயார்க் பல்கலைக்கழக லாங்கான் (NYU Langone) ஆரோக்கிய மைய பட்டப்படிப்பு மாணவரும் ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியருமான ஹேபர்ந் இசா (Habon Issa) கூறுகிறார். ஒரு முறை தூண்டப்படும்போது ஹார் மோனின் செயல்பாடு ஐந்து நிமிடங்க ளுக்கு தொடர்கிறது. தொடர்ந்து இளம் உயிருக்கு பால் கொடுக்கப்படுகிறது. தாயின் மார்பகம் குழந்தை அழுவதை கேட்டு பால் சுரக்கிறது. இது ஒரு புதிய கண்டுபிடிப்பு இல்லை. ஆனால் இந்த ஆய்வு குழந்தை அழும் போது தாயின் மூளையில் நிகழும் மாற்றங்களை கூறுகிறது. குழந்தையின் அழுகைக்கான தாயின் இந்த பதில் வினை பால் கொடுத்தல் எனப்படுகிறது. இந் நிகழ்வை ஆய்வாளர்கள் பாலூட்டுதலுடன் தொடர்புடைய செயல் (Wail-to-milk-pipeline) என்று அழைக்கின்றனர். இந்த ஆய்வு பல பெண்களுக்கு பாலூட்டுதலில் உண்டாகும் சவால்களை நன்கு புரிந்து கொள்ள உதவும். இது பற்றிய ஆய்வுக்கட்டுரை நேச்சர் (Nature) என்ற இதழில் வெளிவந்துள்ளது. ஒரு இளம் சுண்டெலி அழத் தொடங்கும் போது அந்த ஒலித் தகவல் தாயின் மூளை யில் இருக்கும் தலாமஸில் (thalamus) மெடுல்லாவின் உட்புறத்தில் நியூரான்கள் சேரும் பகுதிக்கு (பி ஐ எல்) (the posterior intralaminar nucleus of the thalamus (PIL) செல்கிறது. இந்த உணர்வு மையம் பால் சுரப்பை ஒழுங்குபடுத்தும்ஆக்சிடா சின் ஹார்மோனை வெளியிடும் செல்கள் அல்லது நியூரான்களுக்கு சமிக்ஞை அனுப்புகிறது. இந்த செல்கள் மூளையின் மற்றொரு பகுதியான ஹைப்போ தலாமஸில் உள் ளது. போலியான எச்சரிக்கைகளையும் பால் வீணாவதை தடுக்கவும் பெரும் பாலான சமயங்களில் ஹைப்போதலாம ஸின் இந்த நியூரான்கள் மூடிவைக்கப்பட் டுள்ளன. என்றாலும் தொடர்ச்சியான 30 விநாடி அழுகைக்கு பிறகு பி ஐ எல் பகுதி யில் இருந்து சமிக்ஞைகள் தோன்று கின்றன. இதனால் ஆக்சிடாசினை வெளி யிடுவதற்கான தடை நீக்கப்படுகிறது.
தாயின் மூளையில் நடைபெறும் அதிசயச் செயல்கள்
“குழந்தை உண்மையில் அங்கிருக்கி றதா அல்லது தான் கேட்டது குழந்தையின் உண்மையான அழுகை ஓசை இல்லையா என்பதை இதன் மூலம் தாயின் மூளை உறுதி செய்துகொள்கிறது. பால் சுரப்பிற்கான தயார் நிலையை தாயின் மூளை அடைய இது உதவுகிறது. இந்த செயல்முறை மனித மூளையில் எவ்வாறு இயங்குகிறது என்பதை அறிய இந்த ஆய்வு உதவும். ஒரு தாய் சுண்டெலியிடம் இருந்து ஒரு மனிதத் தாய் வேறுபட்ட உயிரினம். நாம் செவ்வாய்க்கு ரோபோட்டை அனுப்பி ஆராய்ந்து புரிந்துகொள்கிறோம். ஆனால் நம் குழந்தைக்கு நாம் எவ்வாறு உணவூட்டுகிறோம்? குழந்தைக்கு எவ்வாறு தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது? என்பதை சரியாக புரிந்துகொள்வதில்லை” என்று ஆய்வுக்கட்டுரையின் இன்னொரு இணை ஆசிரியரும் நியூயார்க் பல்க லைக்கழக லாங்கான் மையத்தின் ஆய்வா ளருமான பேராசிரியர் ராபர்ட் ஃப்ரோம்க் (Prof Robert Froemke) கூறுகிறார். அழும் குழந்தைதான் பால் குடிக்கும் என்பது பழமொழி. இயற்கையில் நிகழும் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் ஒரு அறிவியல் உண்மை உள்ளது என்பதை இந்த ஆய்வு எடுத்துக்கூறுகிறது.