விருதுநகர்,செப்.8- விருதுநகரில் தமிழ்ப்பாட செய்யுள் களை அரசு பள்ளி ஆசிரியர் ஆடிப்பாடி மாணவர்களுக்கு சொல்லித் தருகிறார். விருதுநகர், வெள்ளையாபுரம் அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றுபவர் வேல்சாமி. இவர், தமிழ் பாடத்தில் உள்ள செய்யுள்களை பாட லாக பாடியும், நடனமாக ஆடியும் கற்பித்து வருகிறார் பறை அடித்தும், சலங்கை கட்டி தலையில் கரகம் வைத்து ஆடியும் 10 ஆண்டுகளாக பாடம் எடுத்து வருகிறார். “நாட்டுப்புறக் கலையும், செய்யுளும் வேறு வேறு கிடை யாது என்பதால், மாணவர்களின் ஆர்வத்தை தூண்ட, கையில் எடுத்த கருவி தான் நாட்டுப்புற கலைகள்” என்று ஆசிரியர் வேல் சாமி பெருமிதத்துடன் கூறினார்.