கொடைக்கானலில் 62-ஆவது மலர் கண்காட்சி தொடக்கம்
கொடைக்கானல், மே 24- தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரை யண்ட் பூங்காவில் கோடைவிழா-2025 மற்றும் 62-ஆவது மலர்க்கண்காட்சி தொடக்கவிழா மாவட்ட ஆட்சித்தலை வர் செ.சரவணன் தலைமையில் சனியன்று நடைபெற்றது. கோடை விழா மற்றும் மலர்க்கண் காட்சியினை திண்டுக்கல் நாடாளு மன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் தொடங்கி வைத்தார். விழாவில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் மரு.க.மணிவாசன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் வி.தட்சிணா மூர்த்தி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் (பொறுப்பு) பி.முருகேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். “மலைகளின் இளவரசி” என அழைக்கப்படும் கொடைக்கானல் தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த சுற்றுலா மலை வாசஸ்தலமாக விளங்குகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலி ருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கோடை காலத்தில் அதிக அளவில் கொடைக் கானலுக்கு வருகை தந்து சுற்றுலா இடங்களை கண்டுகளிக்கின்றனர். கோடைகாலத்தில் வருகை தரும் ஏராளமான சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், தமிழ்நாட்டின் பல்வேறு கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், உழைக்கும் மக்களின் சோர்வை போக்கும் வகையில், வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தவும், அந்நியச் செலாவணியை ஈட்டவும், பொருளாதார பரிமாற்றத்தை ஏற்படுத்த வும் ஆண்டுதோறும் மலர்க்கண்காட்சி மற்றும் கோடைவிழா தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழா ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில், தினமும் பல்வேறு பாரம் பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சி கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணிவகுப்பு, நாய்கள் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், மாவட்ட வன அலுவலர் யோகேஸ் குமார் மீனா, மாவட்ட வருவாய் அலுவ லர் இரா.ஜெயபாரதி, கொடைக்கா னல் வருவாய் கோட்டாட்சியர் ம.திரு நாவுக்கரசு, கொடைக்கானல் நக ராட்சித் தலைவர் பா.செல்லத்துரை, துணைத்தலைவர் கே.பி.மாயக் கண்ணன், கொடைக்கானல் சுற்றுலா அலுவலர் ஹ.கோவிந்தராஜ், கொடைக்கானல் தோட்டக்கலை துணை இயக்குநர் எ.நடராஜன், கொடைக்கானல் நகராட்சி ஆணையா ளர் ப.சத்தியநாதன், நகர்மன்ற உறுப் பினர் தே.இருதயராஜா, கொடைக் கானல் வட்டாட்சியர் சு.பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.