‘அந்நிய முதலீடு வேலைவாய்ப்பையும் உருவாக்கவில்லை, வறுமையையும் ஒழிக்கவில்லை’
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி, “தொழில் முதலீ டுகள்-தொழிலாளர் உரிமைகள்” என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் சென்னையில் கடந்த மார்ச் 13 அன்று நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் கேரள மாநில தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ், சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், சமூகநீதி மற்றும் சமத்துவ மையத்தின் இயக்குநர் முனைவர் ஆர்.பவணந்தி வேம்புலு ஆகியோர் உரையாற்றினர்.
முதலீடுகள் தொழிலாளர் சட்டங்களுக்கு உட்பட்டே வரவேண்டும்
கருத்தரங்கில் பெ. சண்முகம் பேசுகையில், “தமிழக அரசின் பொருளாதார ஆய்வறிக்கையின் படி, 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் பொரு ளாதாரத்தை எட்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள் ளது. தமிழகத்திற்கு 20,157 கோடி ரூபாய் அந்நிய நேரடி மூலதனம் வந்துள்ளது. முதலமைச்சர் செய்துள்ள ஒப்பந்தங்கள் மூலம் 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீடும், 14.55 லட்சம் வேலைவாய்ப்பும் உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் முதலீட்டுக்கு வெறும் 2.5 பேருக்கே வேலை கிடைக்கிறது. இது முழுக்க முழுக்க எந்திர மயமாக்கலால் மனித உழைப்பைக் குறைக்கும் முதலீடு ஆகும். தமிழகத்தில் 78 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு பொதுத்துறை களில் 13 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மின்வாரியத்தில் மட்டும் 60,000 காலிப் பணியிடங்கள் உள்ளன. நிரந்தர பணியிடங்களை நிரப்பாமல், ஒப்பந்தம், வெளிமுகமை முறையில் சமாளிக்கும் அணுகுமுறையை அரசு கடைப் பிடிக்கிறது. மூலதனம் எப்படி வந்தாலும், தமிழக தொழி லாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். சாம்சங் நிறுவனத்தை எதிர்க்கவில்லை, ஆனால் தொழிலாளர் நலச்சட்டங்களை மதிக்காததைத்தான் எதிர்க்கிறோம். தொழிலாளர்களை விசாரணை யின்றி பணியிடை நீக்கம் செய்ததும்,ஒரு சட்டவிரோ தமாக வெளியிலிருந்து திறனற்ற தொழிலாளர்க ளைக் கொண்டுவந்து பணியமர்த்தியதும் ஏற்கத் தக்கதல்ல. அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் 1.5% பேர்தான் வறுமையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ள தில் உண்மையில்லை. நியாயவிலைக் கடைகளில் உணவுப்பொருட்கள் வழங்குவதினாலேயே வறுமை ஒழிந்துவிட்டதாகக் கூறுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். 2021ஆம் ஆண்டு தேர்தலில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறை வேற்ற வேண்டும் “ என அவர் வலியுறுத்தினார்.
தொழிற்சங்கம் முதலீட்டுக்கு எதிரானது அல்ல
சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன்,”1923ஆம் ஆண்டு முதன்முதலாக மே தினத்தைக் கொண்டாடியபோது சிங்காரவேலர் முன்வைத்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும் போராடுகிற நிலையிலிருக்கிறோம். சங்கம் அமைக்கும் உரிமை, வேலைநிறுத்த உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். தொழிற்சங்கம் தொழிலுக்கோ முதலீட்டுக்கோ எதிரானது அல்ல. தொழில்வளர்ச்சி தொழிலாளர்க ளின் வளர்ச்சியோடு இணைந்ததாக இருக்க வேண்டும். சாம்சங் நிறுவனம் ‘தொழிற்சங்கத்தை ஏற்கவில்லை, எனவே நாங்கள் ஏற்கவில்லை’ என்கிறது. அரசியலமைப்புச் சட்டம், தொழிற்சங்க, தொழிலாளர் சட்டங்களை மதித்துதான் நடக்க வேண்டும். ஒன்றிய அரசு 29 தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றிவிட்டது. மாநில அரசுகளை நிர்ப்பந்தித்து ஏப்ரல் 1 முதல் அமலாக்க உள்ளது. 10 ஆண்டுகளாக இந்திய தொழிலாளர் மாநாட்டை ஒன்றிய அரசு நடத்தவில்லை. உற்பத்தி அதிகரிக்கி றது, ஆனால் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மொத்த தொழிலாளர்களில் 80% ஒப்பந்த, வெளிமுகமை ஊழியர்களாக உள்ளனர். இவற்றுக்கெதிராக மார்ச் 18 அன்று மத்திய தொழிற்சங்கங்கள், சம்மேளனங்கள் இணைந்து மாநாடு நடத்தி போராட்டம் அறிவிக்க உள்ளன. பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் பிரிவு 111ன் படி, தொழிற்சாலை முன்பு கூட்டாக ஆர்ப்பாட்டம் நடத்தினாலே பிணை இல்லாத குற்றமாகக் கருதி கைது செய்யப்படலாம். அதன்படி, உ.பி.யில் சிஐடியு மாவட்டத் தலைவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள் ளார். மூலதனத்துக்கோ முதலீட்டுக்கோ தொழிலாளர் கள், தொழிற்சங்கம் எதிரானது அல்ல. ஆனால், அதீத லாபம், கொடூர சுரண்டல் நடந்தால், எந்த அர சாக இருந்தாலும் தொழிலாளர்கள் போராடுவார் கள்” என உறுதிபட முடித்தார்.
அந்நிய நேரடி முதலீடு வறுமையை குறைக்கவில்லை
சமூகநீதி மற்றும் சமத்துவ மையத்தின் இயக்கு நர் முனைவர் ஆர்.பவணந்தி வேம்புலு தனது உரை யில்,”ஆதாயமும், அதிகாரமும் சேர்ந்ததே மூல தனம். காலனி ஆதிக்கம் என்பது அந்நிய முதலீடு சார்ந்ததுதான். விடுதலைப் போராட்டம் அரசியல் உரிமைக்காக மட்டுமல்ல, அந்நிய முதலீட்டுக்கு எதிரான பொருளாதார விடுதலைக்காகவும் சேர்ந்தே நடந்தது. அந்நிய நேரடி முதலீடு தேசத்தின் பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும், அந்த வளர்ச்சி அனைவ ருக்குமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது உண்மையா? அந்நிய நேரடி முதலீடு வேலை யின்மையைப் போக்கியுள்ளதா? வறுமையைக் குறைத்துள்ளதா? 1980 முதல் 2010 வரையான காலகட்டத்தில், 1980ல் 43 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருந்தனர். 2010ல் அது 40 கோடியாக உள்ளது. 30 வருடத்தில் வெறும் 3 கோடி பேர்தான் வறு மையிலிருந்து வெளியேறியுள்ளனர். 1980ல் உலக ளவில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருந்தவர்களில் 22% பேர் இந்தியாவில் இருந்தனர். 2010ல் இது 33% ஆக அதிகரித்துள்ளது. ஆக, அந்நிய நேரடி முதலீடு வளர்ச்சியை உருவாக்கவில்லை, அது அனை வருக்குமான வளர்ச்சியாகவும் இல்லை. அந்நிய நேரடி முதலீடு வந்த பிறகுதான் இந்தியா வில் வேலையின்மை அதிகரித்துள்ளது. அது திறன்சார் வேலைவாய்ப்புகளை மட்டுமே உருவாக்கு கிறது. இந்தியாவின் உழைப்பாளிகள் பெரும்பகுதியி னர் முறைசாரா தொழிலாளர்கள். அந்நிய நேரடி முதலீடு வந்தால் விவசாயக் கூலித்தொழிலாளிகள் அந்தத் தொழிலிலிருந்து வெளியேறலாம் என்றனர், ஆனால் அப்படி ஏதும் நிகழவில்லை. இந்தியாவுக் குள் வரும் அந்நிய நேரடி முதலீட்டை விட, இந்தியா விலிருந்து வெளியே செல்லும் முதலீடுகளே அதிக வேலைவாய்ப்பை உருவாக்குகின்றன” என அவர் சுட்டிக்காட்டினார். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஐரோப்பிய, ஜப்பானிய நாடுகளில் அந்நிய நேரடி முதலீடு அதி கரித்தது. அதே காலகட்டத்தில்தான் அங்கு தீவிர தொழிற்சங்க செயல்பாடுகளும் உச்சம் பெற்றன. இந்த தொழிற்சங்க போராட்டங்களைக் கொண்டே அங்குள்ள அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி சாத்தியமானது என்றார்.”