திருவனந்தபுரம், மே 24- கேரளத்துக்கு சிறப்பு ரயில்கள் அனுப்பும் போது மாநில அரசுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கவும் பயணிகள் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அளிக்கவும் வேண்டும் என ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு அனுப்பிய இ.மெயிலில் முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார். பயணிகளின் பெயர், முகவரி, தொடர்பு எண், தங்குமிடம் போன்ற விவரங்கள் மாநிலத்திற்கு அளிக்கப்படாவிட்டால், கோவிட்- 19 பரவுவதை தடுப்பதற்கான அரசின் முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படும். பரி சோதனை, கண்காணிப்பு, சிகிச்சை போன்ற வற்றுக்கு வாய்ப்பளிக்காமல் மிகப்பெரிய சமூக பரவலுக்கு அது வழி வகுத்துவிடும். இந்நிலையில் மும்பையிலிருந்து மே 22 ஆம் தேதி கேரளத்திற்கு புறப்பட்ட சிறப்பு ரயில் குறித்த விவரங்கள் மாநில அரசுக்கு தெரிவிக்கப்படவில்லை என்பதை ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு அனுப்பிய கடிதத்தில் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.