tamilnadu

img

பரணி பார்க் கல்விக் குழுமத்தில் பாரதியார் பிறந்த நாள் விழா 

 கரூர், டிச.11- மகாகவி பாரதியாரின் 137-வது பிறந்தநாள் விழா பரணி பார்க் கல்விக்குழுமத்தில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பாரதியார் வேட மணிந்து சிறப்பித்தனர். மேலும் மாணவ, மாணவிகளிடையே பாரதியார் பாடல் ஒப்புவித்தல் போட்டி, கவிதைப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, போன்ற பல்வேறு போட்டி கள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவிற்கு பரணி பார்க் கல்வி குழும தாளாளர் எஸ்.மோகனரெங்கன் தலைமை வகித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பரணி பார்க் கல்வி குழும செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார். பரணி பார்க் கல்வி குழும முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்பிரமணியன் பாரதியாரின் தேசப்பற்று குறித்தும், அவருடைய எழுச்சிமிக்க தமிழ்ப் பாடல்கள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்.