1531 போப் தலைமையிலான கத்தோ லிக்கத் திருச்சபையுடனான உறவு களைத் துண்டித்துக்கொண்டபின், ‘இங்கி லாந்து திருச்சபைக்கு, புவியில் உச்சத் தலைவர் என்ற பதவியை உருவாக்கி, அதில் தன்னை நியமித்துக்கொண்டார். கிறித்தவம் அவ்வளவு எளிதில் இங்கிலாந்திற்குள் நுழையவில்லை. முதலில் உருவானதும், அதிக மக்களால் பின் பற்றப்படுவதுமான கத்தோலிக்கக் கிறித்தவம் அங்கு கடுமையான இடர்களைச் சந்தித்தது. உலகம் முழுவதும் இருந்ததைப்போன்றே, அவ்வப்பகுதிக்கான பல சிறு தெய்வங்களை வழிபடும் முறையே இங்கிலாந்திலும், பல மாறுபட்ட வடிவங்களில் காணப்பட்டது. இங்கிலாந்தின் ரோமப் பேரரசின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளுக்குள் கி.பி.3-4ஆம் நூற்றாண்டில் கிறித்தவம் நுழைந்தது.
5ஆம் நூற்றாண்டில் சாக்சன்கள் ஆக்கிரமித்த பகுதிகளில் ஒடுக்கப்பட்டது. 600களில் இங்கிலாந்தின் திருச்சபை உரு வாக்கப்பட்டாலும், 11ஆம் நூற்றாண்டில் நோர்மன்கள் ஆக்கிரமித்தபின்னரே, இங்கிலாந்து முழுவதும் கிறித்தவம் பரவியது. வரலாற்றை உற்று நோக்கினால், பெரிய, முறைப்படுத் தப்பட்ட சமயங்களின் தோற்றமே, மக்கள்மீது சமயத்தின் அதிகாரம், அதன் கட்டுப்பாட்டி லிருந்த செல்வம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையாக இருப்பதையும், கிறித்தவத் தலைமைக்கும், அரசர்களுக்குமிடையிலான முரண்பாடுகளும், அதிகார மும், அதன்வழியே திரளும் பொருளும் யாரிடம் என்பதிலான போட்டியாகவே இருப்பதை யும் உணர முடியும். திருத்தந்தை நாடுகள் என்றழைக்கப்பட்ட நாடுகளின் ஆட்சியதிகா ரமே போப்பிடம் இருந்த நிலையில், அதிகாரம் அரசரிடமிருந்த இங்கிலாந்து போன்ற நாடுகளில், போப் அதிகாரம் செலுத்த முடியவில்லை என்பதுடன், அப்படி அதிகா ரத்தைச் செலுத்த முற்பட்டபோது, அவரது சமயத் தலைமையே கேள்விக் குறியாக்கப் பட்டது என்பதற்கு உதாரணம் இங்கிலாந்து.
மார்ட்டின் லூதரால் சீர்திருத்தத் திருச்சபை உருவாக்கப்பட்டபோது, ‘கத்தோலிக்கத்தின் ஏழு அருட்சாதனங்களின் பாதுகாவல்’ என்பதை எழுதி, நம்பிக்கையின் பாதுகாவலன் என்று போப்பால் பட்டமளிக்கப்பட்டவர், அரசர் எட்டாம் ஹென்றி. அவரது விவாகரத்திற்கும் (அடுத்த மணத்திற்கும்) கத்தோ லிக்கத் தலைமை குறுக்கீடாக ஆனதால், அவரே, இங்கிலாந்தின் திருச்சபையின்மீது போப்பிற்கு அதிகாரமில்லை என்று அறிவித்து, தானே தலைவரானார். அடுத்தடுத்த அரசர்களால் மாறிமாறி கத்தோலிக்கம் ஏற்கப்பட்டும், மறுக்கப்பட்டும் வந்த நிலையில், முதலாம் எலிசபெத் அரசி உருவாக்கிய ‘எலிசபெத்திய தீர்வு’, கத்தோலிக்கத்திற்கும், ப்ராட்டஸ்டண்டிசத்திற்கும் இடைப்பட்ட நிலையிலான ‘ஆங்கிலிக்கன் கிறித்தவமாக’ நிலைபெற்றது.
- அறிவுக்கடல்