எல்.ஐ.சி முகவர்களுக்கு நிவாரண தொகை வழங்கிட வேண்டும் என எல்ஐசி முகவர் சங்கம் (லிகாய்) கோரிக்கை வைத்துள்ளது.
இதுதொடர்பாக அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் (லிகாய்) சேலம் கோட்டதலைவர் முருகன் நாயர், செயலாளர் சிவமணி, கோட்ட பொருளாளர் லோகநாதன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, அகில இந்திய எல்.ஐ.சி முகவர்கள் சங்க (லிகாய்) நிர்வாக குழுவின் தேசிய தலைவர் பாசுதேவ ஆச்சாரி, தேசிய செயலாளர் பி.ஜி. திலீப் தலைமையில் கடந்த மார்ச் 16 ஆம் தேதி எல்.ஐ.சி சேர்மன் அவர்களுக்கு மனு அளித்தது. இதில் ஊரடங்கின் காரணமாக வெளியே வரமுடியாத சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.
ஆகவே, கொரோனா வைரஸ் பேரிடர் இழப்பில் சிக்கி தவிக்கும் அனைத்து முகவர்களுக்கும் நிபந்தனை இல்லாத மூன்று மாத சராசரி கமிஷனை நிவாரண தொகையாகவும் மற்றும் பேரிடருக்கான நீண்டகால முன்பணமாகவும் வழங்க கடிதம் அனுப்பப்பட்டது,
ஆனால், இதுவரை அந்த கடிதத்தின் பேரில் எந்த விதமான நடவடிக்கைகள் எடுக்காமல் எல்ஐசி நிர்வாகம் உள்ளது. ஆகவே மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு முகவர்களின் வாழ்வாதாரத்தில் அக்கறை கொண்டு மூன்று மாத வாழ்வுகால பயனாக நிபந்தனை இல்லாத சராசரி கமிஷனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.