இந்திய கிரிக்கெட் அணி வீரரான முகமது சமியின் விசா விண்ணப்பத்தை அமெரிக்க தூதரகம் நிராகரித்துள்ளது தொடர்பாக பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது.
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் அடுத்த மாதம் 3-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் விளையாட உள்ள இந்திய அணி வீரர் முகமது சமியின் விசா விண்ணப்பத்தை அமெரிக்கா நிராகரித்து விட்டதாக பிசிசிஐக்கு தகவல் கிடைத்தது. முகமது சமி தொடர்பாக போலீசார் அளித்துள்ள தகவல்களை சுட்டிக்காட்டி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ள பிசிசிஐ, அமெரிக்க தூதரகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், தேவையான அனைத்து ஆவணங்களும் அளிக்கப்பட்டு உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் முகமது சமி நிச்சயம் விளையாடுவார் என தெரிவித்துள்ளது.
தன்னை கொடுமைப்படுத்துவதாக முன்னாள் மனைவி ஹசின் ஜகான் அளித்த புகாரின் பேரில், முகமது சமி மீது கொல்கத்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.