tamilnadu

img

தேசிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெறு

தேசிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெறு

தேசிய கல்விக் கொள்கையை ஒன் றிய மோடி அரசு திரும்பப் பெற வலியு றுத்தி மாணவர், இளைஞர் அமைப்பி னர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்தி, சமஸ்கிருதத் திணிப்பைக் கைவிட வேண்டும். தேசிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வேண் டும். தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய  கல்வி நிதியை உடனே வழங்கிட வேண் டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றிட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை  வலியுறுத்தி மாணவர், இளை ஞர் அமைப்பினர் பங்கேற்ற ஆர்ப்பாட் டம் கோவை மாவட்டம், ஆட்சியர் அலு வலகம் அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் தினேஷ் ராஜா தலைமை  வகித்தார். வாலிபர் சங்க மாநிலப் பொரு ளாளர் பாரதி, ஆர்எஸ்ஒய்எப் மாநில பொதுச்செயலாளர் அன்பு ஆகியோர்  சிறப்புரையாற்றினர். இந்திய மாணவர்  சங்க மாவட்டத் தலைவர் அகமது ஜூல்பி, மாணவர் பெருமன்றம் மாவட் டச் செயலாளர் பிரசாந்த், அனைத்திந் திய இளைஞர் பெருமன்றம் செயலா ளர் வசந்த் குமார் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர்.