விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
கூலி உயர்வு கோரி விசைத் தறி உரிமையாளர்கள் காலவரை யற்ற வேலை நிறுத்தம் மேற் கொண்டிருக்கும் நிலையில், இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் விசைத்தறியா ளர்களுடன் செவ்வாயன்று பேச்சுவார்த்தை மேற்கொண் டார். கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையா ளர்கள், தங்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தி, கடந்த நான்கு நாட்க ளாக வேலை நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சுமார் ஒன்றரை லட் சம் விசைத்தறிகள் மூடப் பட்டுள்ளது. சுமார் ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப் படுகிறது. மேலும், விசைத்தறி தொழிலை நம்பியுள்ள ஆயிரக் ்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிப்பிற்குள் ளாகி உள்ளது. இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், விசைத்தறி உரிமையாளர்களு டன் செவ்வாயன்று பேச்சு வார்த்தை நடத்தினார். இதில், அன்னூர், தெக்கலூர், சோம னூர், கண்ணம்பாளையம் பகுதி களைச் சேர்ந்த விசைத்தறி சங் கப் பிரதிநிதிகள் கலந்து கொண் டனர். இதில் எந்த முடிவும் எடுக் கப்படவில்லை என்றபோதிலும், ஆட்சியரின் முன்முயற்சி நம் பிக்கை ஏற்படுத்தியுள்ளதாக பேச்சுவார்த்தையில் பங்கேற்ற வர்கள் தெரிவித்தனர். பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த கோவை - திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத் தறி உரிமையாளர் சங்கத் தலை வர் பூபதி, “கடந்த 15 மாதங்க ளாக 2022 ஆம் ஆண்டு ஒப்பந் தக் கூலியை உயர்த்தக் கோரி வருகிறோம். இது வரை 10 முறை பேச்சுவார்த் தைகள் நடந்து, போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது விசைத்தறி கூடங்களை மூடி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகிறோம், மாவட்ட ஆட்சியரின் அழைப்பின் பேரில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தை யில், “கூலி உயர்வு இருந்தால் மட்டுமே விசைத்தறித் துறை யைக் காப்பாற்ற முடியும் என வலியுறுத்தினோம். எங்கள் கோரிக்கைகளை ஆட்சியர் பரி சீலிப்பதாக உறுதியளித்துள் ளார்,”. மாவட்ட நிர்வாகம் விசைத்தறி மற்றும் ஜவுளித் துறையை இணைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ள தாக தெரிவித்தார். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாளொன் றுக்கு ரூ.25 முதல் ரூ.30 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள் ளது. கடந்த ஒரு வாரத்தில் மட் டும் சுமார் 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2022 ஒப் பந்தக் கூலியிலிருந்து 50 சதவி கிதம் முதல் 60 சதவிகிதம் வரை கூலி உயர்வு வேண்டும் என் பதே எங்கள் கோரிக்கை,”. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், விசைத் தறி துறையும் அதைச் சார்ந்த தொழிலாளர்களும் மேலும் பாதிக்கப்படும் என்றார்.