tamilnadu

img

கோவிலுக்கு சொந்தமான பணம், நகையை மீட்கக்கோரி மனு

கோவிலுக்கு சொந்தமான பணம், நகையை மீட்கக்கோரி மனு

தருமபுரி, அக்.2- அறநிலைத்துறைக்குட்பட்ட கோவிலுக்கு சொந்தமான உண்டி யல் பணம் மற்றும் நகையை தனி  நபரிடமிருந்து மீட்டுத்தர வேண் டும் என வலியுறுத்தி தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் கவி தாவிடம் மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் கூறியிருப்பதா வது, தருமபுரி மாவட்டம், காரி மங்கலம் வட்டம், பெரியாம்பட்டி யில் இந்து அறநிலையத்துறை கட் டுப்பாட்டில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 100 வருடங்களுக்கு மேல் சுமார் 2000 வீடுகள் கட்டி பொதுமக்கள் குடியி ருந்து வருகின்றனர். இக்கோவி லுக்கு வரும் பக்தர்கள் பணமாக வும், வெள்ளி நகை மற்றும் தங்க மாக உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்த நகைகள் அறநிலையத்துறையின் நேரடி நிர்வாகம் மற்றும் கண்கா ணிப்பில் இருப்பதற்கு பதிலாக,  முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டுரங்கன், தனது வீட்டில் சுமார் 20 வருட காலமாக வைத்துள்ளார். வெள்ளி நகை சுமார் 3 கிலோவும், தங்க நகைகள் சுமார் 50 பவுன் இருக்கும். மேலும், பல லட்ச ரூபாய் பணமும் அவரிடம் உள்ளது. இந்த செயல் அறநிலைத்துறையின் ஒழுங்கு முறை விதிகளுக்குட்பட் டது அல்ல. எனவே பாண்டுரங்க னின் செயல் குறித்து மாவட்ட நிர்வா கம் விசாரணை நடத்தி உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோவிலுக்கு சொந்தமான உண்டி யல் பணம் மற்றும் நகையை மீட்க வேண்டும் என அம்மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்நிகழ்வில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பி.டில்லி பாபு, மாவட்டச் செயலாளர் சோ. அருச்சுணன், தலைவர் எம்.குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முன்னாள் ஒன்றிய கவுன் சிலர் உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.