tamilnadu

img

மே 20 வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச்செய்வோம்

மே 20 வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச்செய்வோம்

நாமக்கல், மே 5 – ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து, மே 20 பொது வேலை நிறுத்தம் மற் றும் மறியல் போராட்டத்தை நாமக்கல்  மாவட்டத்தில் வெற்றிபெறச்செய் வோம் என மத்திய தொழிற்சங்க கூட்டத் தில் நிர்வாகிகள் சூளுரைத்தனர். தொழிலாளர் நலன் மற்றும் சமூக  பாதுகாப்பை உறுதி செய்ய, தொழிலா ளர் விரோத சட்டங்களை நீக்கக் கோரி  மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2025  மே - 20 ஆம் தேதி நாடு தழுவிய  பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட் டுள்ளது. ஒன்றிய பாஜக அரசின் நவீன  தாராளமயக் பொருளாதார கொள்கை களால், நிரந்தரத் தொழிலாளர்கள் குறைக்கப்படுகின்றனர். ஒப்பந்த தொழி லாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகி றது. கார்ப்பரேட் மற்றும் பெரும் நிறுவ னங்கள் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டிட மோடி தலைமை யிலான பாஜக அரசு அனைத்து வாய்ப்பு களையும் உருவாக்கி தருகின்றனர்.  தொழிலாளர்கள் உரிமைகள்  மறுக்கப்படுகிறது, கார்ப்பரேட்டுக ளுக்கு ஆதரவாக தொழிற்சங்க உரிமை களை மோடி அரசு முடக்குகிறது. தொழி லாளர்கள் போராடி பெற்ற உரிமை களை பாதுகாத்திட மே -20 அன்று மத் திய தொழிற்சங்கங்கள் பொது வேலை  நிறுத்திற்கு அறைகூவல் விடுத்துள் ளது. இப்போராட்டத்தை வெற்றி கரமாக்கிட ஆயத்த மாநாடு நடைபெற் றது.  திருச்செங்கோடு நாடார் திருமண  மண்டபத்தில், மத்திய தொழிற்சங்கங் கள் பங்கேற்ற மாவட்ட ஆயத்த மாநாடு  நடைபெற்றது. இதில், பள்ளிபாளை யம், குமாரபாளையம், திருச்செங் கோடு, ராசிபுரம் ,நாமக்கல் உள்ளிட்ட ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வலுவான மறியல் போராட்டம் நடத்து வது என முடிவெடுக்கப்பட்டது.  முன்னதாக, மாநாட்டிற்கு, எச்எம் எஸ் மாவட்டத் தலைவர் கலைவாணன் தலைமை ஏற்றார். இதில், சிஐடியு மாநில துணைத் தலைவர் ஆர். சிங் காரவேலு, ஏஐடியுசி மாநிலச் செயலா ளர் முருகராஜ், எச்எம்எஸ் மாநிலத் துணைச் செயலாளர் செல்வராஜ், எம் எல்எப் மாநிலச் செயலாளர் ரங்கசாமி,  ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர்  தனசேகரன்,  சிஐடியு மாவட்டச் செயலா ளர் என்.வேலுசாமி, மாவட்டத் தலை வர் எம்.அசோகன், ஐஎன்டியுசி மாவட்ட  கவுன்சில் செயலாளர் பழனிவேல். ஏஐ சிசிடியு மாவட்டச் செயலாளர் வெங்கடே சன், எம்எல்எப் மாவட்ட கவுன்சில் செய லாளர் வைகோபாலு உள்ளிட்ட மத்திய  தொழிற்சங்க தலைவர்கள் திரளாக பங் கேற்றனர்.