tamilnadu

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஏப்.6 இல் கோவை வருகிறார் முதல்வர்

கோவை, மார்ச் 24 – ஏப்ரல் 6ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ள  வள்ளிக் கும்மி நடனத்தில் கின்னஸ் சாதனை படைத்த 16 ஆயிரம் பெண்களுக்கான பாராட்டு விழாவில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாக கொமதேக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுகுறித்து கொமதேக மாநில துணைப் பொதுச் செயலாளர் நித்தியானந்தம் செய்தியாளர்களிடம் பேசு கையில், “ கொங்கு கலைக் குழு சார்பில், ஈரோடு  மாவட்டம் பெருந்துறையில் கடந்த ஆண்டு 16 ஆயி ரம் பெண்கள் பங்கேற்று வள்ளிக் கும்மி நடனமாடி உலக சாதனை படைத்தனர். அவர்களுக்கு பாராட்டு விழா கோவை மாவட்டம், கொடிசியா மைதானத்தில் வரும்  ஏப்ரல் 6ஆம் தேதி மாலை நடைபெற உள்ளது. இதில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கின்னஸ் சாதனை படைத்த பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்க உள்ளார். இதில், பத்தாயிரம் பெண்கள் பங் கேற்று வள்ளிக்கும்மி நடனமாட இருக்கிறார்கள், என் றார்.

அரசுப்பள்ளியில் மகனை சேர்த்த ஆசிரியர்

ஈரோடு, மார்ச் 24- ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பணியாற் றும் ஆசிரியர் தனது மகனை அதேபள்ளியில் சேர்த் துள்ளார். அரசு பள்ளிகளில் 2025-2026 ஆம் கல்வியாண்டுக் கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகி றது. மாணவர் சேர்க்கையை அதிக்கப்படுத்தும் நோக் கில் பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு எஸ்.கே.சி.சாலையில் செயல்பட்டு வரும் மாநக ராட்சி நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் டேவிட் லிவிங்ஸ்டன், தனது மகன்  சாம் ஆர்த்தரை, அதே பள்ளியில் எல்கேஜி வகுப்பில்  சேர்த்துள்ளார். ஆசிரியர் டேவிட் லிவிங்ஸ்டனை பள்ளி யின் தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

சம்பளப் பாக்கி வழங்கக்கோரி மனு அவிநாசி

, மார்ச் 24– நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய தொழி லாளர்களுக்கு சம்பளப் பாக்கியை வழங்கக்கோரி கானூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் திங்களன்று மனு அளித்தனர். கானூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்டோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காமல் காலதாமதப் படுத்தி  வருகின்றனர். மேலும், ஏற்கனவே வேலை செய்த நபர்க ளுக்கு நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதனை நம்பி வாழும் விவசாயத் தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதனையடுத்து, நிலு வையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண் டும். அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை கானூர் ஊராட்சி மன்ற செயலாளரிடம் விதொச நிர்வாகிகள் அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட  அதிகாரி உரிய தீர்வு ஏற்பட நடவடிக்கை மேற்கொள்வ தாக தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சண்முகம், ஒன்றிய துணைத்தலைவர் குருநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 13 பேர் படுகாயம் நாமக்கல்

, மார்ச் 24- கொல்லிமலை அருகே சுற்றுலா வேன் விபத்துக் குள்ளானதில், 13 பேர் படுகாயமடைந்தனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லிமலை தமிழ் நாட்டின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கி வரு கிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராள மானோர் இங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், வார விடுமுறையான ஞாயிறன்று சேலம் மாவட்டம், ஆத் தூர் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் டூரிஸ்ட் வாகனத்தில் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்துள்ளனர். இதையடுத்து மாலை வீடு திரும்பும் போது, முள்ளுக் குறிச்சி அருகே உள்ள வனத்துறை சோதனைச்சாவடி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் 13 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தக வலறிந்த ஆயில்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத் திற்கு சென்று, படுகாயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பலர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட் டுள்ளனர்.

ரத்ததான முகாம் நடத்த முடிவு

வருடம் ஒருமுறை ரத்ததான முகாம் நடத்துவ தென, கோன் நூல் வியாபாரிகள் சங்கத்தின் கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், பெரியார் நகர் பகுதியில் கோன் நூல் வியாபாரிகள் சங்க வரு டாந்திர பொதுக்குழு கூட்டம் திங்களன்று நடைபெற் றது. இந்நிகழ்விற்கு சங்கத்தின் தலைவர் தங்கராஜ், துணைத்தலைவர் ஜானகிராமன் ஆகியோர் தலைமை  வகித்தனர். செயலாளர் சம்பு, பொருளாளர் ஆர்.பி. சக்திவேல் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்த னர். இக்கூட்டத்தில், நாளுக்கு நாள் மனித ரத்தத்தின் தேவை அதிகரித்து வருவதால், அதை ஈடுகட்டும் வகை யில் சங்கத்தின் சார்பில் வருடத்திற்கு ஒருமுறை ரத்ததான முகாமை நடத்தி, அதில் ஏராளமானோரை பங்கேற்க வைப்பது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.