கோவை, மார்ச் 29– மக்கள் விரோத மோடி அரசை தூக்கி எறிந்து நாட்டையும், மக்களையும் காப் போம் என்கிற முழக்கத்தோடு இரண்டாவது நாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஆயி ரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்று எழுச்சி முழக்கங்களை எழுப்பினர். ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங் கங்கள் அறைகூவல் விடுத்திருந்தது. இதன் படி முதல்நாளான திங்களன்று நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, இரண் டாவது நாள் வேலை நிறுத்த போராட்டம் செவ்வாயன்று தொடர்ந்தது. இதன் ஒருபகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றிய மோடி அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்பநாபன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், எல்பிஎப் ரத்தினவேல், ஏஐடியுசி ஆறு முகம், ஐஎன்டியுசி சண்முகம், எச்எம்எஸ் வீராச்சாமி, எம்எல்எப் தியாகராசன், ஏஐசிசி டியு தாமோதரன், எஸ்டிடியு ரகுபு நிசார், எல்டியுசி ஜெயபிரகாஷ் உள்ளிட்ட தலை வர்கள் கலந்து கொண்டனர். மேட்டுப்பாளையம் அண்ணா மார்க் கெட் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சிஐடியு தாலுகா செயலாளர் பாஷா தலைமை வகித்தார். இதில், எல்பிஎப் பொறுப்பாளர் குப்புசாமி, ஏஐடியுசி மெகபூப், எச்எம்எஸ் லட்சுமி காந்தன், ஐஎன் டியுசி ரவி, சிஐடியு குடிநீர் வடிகால் வாரிய பொறுப்பாளர் சசிகுமார் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
சேலம்
சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு எச்எம்எஸ் தொழிற்சங்க நிர்வாகி கணேசன் தலைமை வகித்தார். இதில், சிஐடியு சார்பில் எஸ்.கே.தியாகராஜன், பி.பன்னீர்செல்வம், ஆர். வெங்கடபதி, ஏ.கோவிந்தன், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மனோன் மணி, ஏஐடியுசி மாவட்ட செயலாளர் முனு சாமி, ஏஐசிசிடியு மாவட்ட நிர்வாகி வேல் முருகன், எல்பிஎப் தொழிற்சங்க மாவட்ட நிர் வாகிகள் பொன்னி.பழனியப்பன், கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தருமபுரி
தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐ டியு மாவட்ட செயலாளர் சி.நாகராசன் தலைமை வகித்தார். இதில், சிஐடியு சார்பில் ஜி.நாகராஜன், பி.ஜீவா, ஏ.தெய்வானை, ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் கே. மணி, நிர்வாகிகள் சுதர்சனம், முருகன், எல்பிஎப் சண்முகராஜா, அன்புமணி, சின்ன சாமி, ஏஐசிசிடியு சி.முருகன், எச்எம்எஸ் அர்ச்சுணன், ஐஎன்டியுசி லட்சுமணன் மற் றும் எம்.சுருளிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நல்லம்பள்ளி இந்தியன் வங்கி முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு எச்எம்எஸ் மாவட்ட செயலாளர் அர்சுணன் தலைமை வகித்தார். இதில், சிஐடியு கே.குப்புசாமி, ஏஐடியுசி சுதர்சனம், விவசாய தொழிலா ளர் சங்கத்தின் ஜே.பிரதாபன் உட்பட திர ளானோர் கலந்து கொண்டனர். கடத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் துக்கு ஏஐடியூசி மாவட்ட நிர்வாகி மணோ கரன் தலைமை வகித்தார். இதில், சிஐடியு ஜெயக்குமார், விவசாய தொழிலாளர் சங்க எம்.கணேசன், மார்க்சிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் தனுசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொம்மிடியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் சிஐடியு மாவட்ட நிர்வாகி தீ.லெனின் மகேந்திரன், விவசாயிகள் சங்க வட்ட செய லாளர் தீர்த்தகிரி, பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி. வஞ்சி, டி.சேகர், ஏஐடியுசி சம்பத், காரிமங்க லத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எல்பிஎப் நிர்வாகி லட்சுமி நாராயணன், மாற்றுத்திறனாளிகள் சங்க எம்.மாரிமுத்து, சிஐடியு நிர்வாகி ஈஸ்வரி, காரியமங்கலம் பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர்.மணோ கரன், திமுக நகரச் செயலாளர் சீனிவாசன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் பி.ஜெயராமன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். பாலக்கோட்டில் சிஐடியு சி.கலாவதி, அரூரில் எல்பிஎப் ஜே.பழனி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு சி.ரகுபதி, விவசாய தொழி லாளர் சங்க இ.கே.முருகன், விவசாயிகள் சங்க எஸ்.கே.கோவிந்தன், சிபிஐ காசி.தமிழ் குமரன் உட்பட திரளானோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர். மேலும், தொழிற்சங்கங்கள் நடத்திய இந்த போராட்டத்திற்கு ஆதரவாக எல்ஐசி, பொது இன்சூரன்ஸ், வங்கி, அரசு ஊழியர் சங்கம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், மின்வாரிய ஊழியர்கள், அரசு போக்கு வரத்து ஊழியர்கள், அரசு மற்றும் அனைத் துத்துறை ஓய்வூதியர்கள் சங்கம், அங்கன் வாடி, சத்துணவு உள்ளிட்ட சங்கங்களின் சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றது.