tamilnadu

img

இரண்டாவது நாளாக எழுச்சியுடன் தொடர்ந்த பொது வேலைநிறுத்தம்

திருப்பூர், மார்ச் 29- நாடு முழுவதும் தொழிற்சங் கங்கள் சார்பில் இரண்டாவது நாளாக செவ்வாயன்று பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடை பெற்றது.  திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவல கத்தில் அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரும் பணிகளை புறக்க ணித்து அலுவலகம் முன்பாக கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் வழக்கமாக நடைபெறும் பணிகள் முடங்கின. தாராபுரம் அண்ணாசிலை முன்பு சிஐடியு மாவட்ட துணை தலைவர் என்.கனகராஜ் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதேபோல், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தாராபுரம் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் தாராபுரம் வட்டக் கிளை செயலாளர் இல.தில்லை யப்பன், வட்டக்கிளை தலைவர் கே.செந்தில்குமார் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர். திருமுருகன்பூண்டி காந்தி சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் சிஐடியு பனியன் சங்க  மாவட்ட நிர்வாகிகள் ஈஸ்வர மூர்த்தி, பழனிச்சாமி, ராஜன், மார்க் சிஸ்ட் கட்சியின் நகரமன்ற உறுப்பி னர்கள் சுப்பிரமணியம், தேவ ராஜன், பார்வதி, அங்கன்வாடி ஊழி யர் சங்கத்தின் தனலட்சுமி, இந்திராணி, மல்லிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே போல், தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்கத்தினர் அவிநாசி வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இதில், நிர்வாகி கள் கருப்பன், ராமன், விஜய லட்சுமி, ஜோதி, சின்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

நாமக்கல் பூங்கா சாலை முன்பு நடைபெற்ற போராட்டத்தில் எல்பி எப் மாவட்ட கவுன்சில் செயலாளர் கபாடி ச.பழனியப்பன், ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் பி.தனசேகரன், சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி, மாவட்ட உதவி செயலாளர் சிவராஜ்,   ஐஎன்டி யுசி  மாவட்ட செயலாளர் கே.பழனி வேலு, எச்எம்எஸ் மாவட்ட செயலா ளர் பி.பாலாஜி, மாதேஸ்வரன் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் செல்வராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு தபால் நிலை யம் முன்பு அஞ்சலக ஊழியர்கள் இரண்டாவது நாளாக பொது வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத் தில் என்எப்பி சங்கத்தின் சந்திர சேகரன், ஈஸ்வரமூர்த்தி, கிராமிய அஞ்சலக ஊழியர் சங்கத்தின் கே.சி.ராமச்சந்திரன், எம்.ஜெகதீஸ் வரன் மற்றும் எஸ். மணியாறன் உட்பட பலர் கலந்துகொண்ட னர்.  

பள்ளிப்பாளையத்தில் நடை பெற்ற போராட்டத்தில், சிஐடியு மாவட்ட தலைவர் எம்.அசோகன், கே.மோகன், எல்பிஎப் சேகர், ஏஐடியுசி தலைவர் செல்வராஜ், ஏஐசிசிடியுசி வெங்கடேசன், எல்டியுசி புகழேந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். குமாரபாளையத்தில் நடை பெற்ற போராட்டத்தில்,  ஏஐடியுசி பாலசுப்ரமணியன், ஏஐசிசிடிசியு மாணிக்கம், ஏஐடியூசி நஞ்சப்பன், எல்பிஎப் அருள்ஆறுமுகம், சிஐடியு கே.பாலுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். ராசிபுரம் பேருந்து நிறுத்தம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியு  மாவட்ட நிர்வாகிகள் ஆர்.ரங்கசாமி, பழனி வேல், காளியப்பன், எச்எம்எஸ் மாவட்டத் தலைவர் கலைவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  நாமக்கல் மின் பராமரிப்பு துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோவிந்தராசு, முருகேசன், சௌந்த ரராஜன், கண்ணன், தண்டபாணி, பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.   எலச்சிபாளையம் ஒன்றியம் பெரியமணலியில் நடை பெற்ற போராட்டத்தில் ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஜெயராமன், சிஐடியுவின் வீ.தேவராஜ், சு.சுரேஷ்,  ஜோதிமணி, துரைசாமி, ரமேஷ், வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

அகில இந்திய வேலை நிறுத் தத்தின் இரண்டாவது நாளான செவ்வாயன்று ஈரோடு வட்டாட்சி யர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராக்கிமுத்து தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‌‌இதில் மாநில செயலாளர் அன்னா குபேரன், முன்னாள் மாநிலத் தலை வர் க.ராஜ்குமார், சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்பிரமணியன் ஆகி யோர் உரையாற்றினர். நிறைவாக மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர்  நன்றி கூறினார்.