தருமபுரி, ஏப்.27-தருமபுரியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் அரசு துறை தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளது.தருமபுரி தொலைபேசி நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அலுவலகத்தில் அரசுதுறைத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் வாரத்தில் சனி, ஞாயிறு ஆகிய இருநாட்கள் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நடைபெறும் இந்த பயிற்சி முகாமின் துவக்க விழா சங்கத்தின் மாவட்ட துணைதலைவர் எம்.சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஏ.சேகர் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் எஸ்.பழனிச்சாமி வகுப்புகளை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட பொருளாளர் கே.புகழேந்தி, சி.காவேரி, என்.ராமஜெயம், ஜி.பழனியம்மாள், கே.ஆர்.அப்பாவு, எம்.கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு அரசுத்துறைகளில் பணியாளர்கள் கணக்காளர் போட்டி தேர்வு எழுதுவதற்கு இந்த இலவச பயிற்சி வகுப்பில் படித்து பயன்பெறுமாறு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.