சேலம், ஜூலை 8- காவிரியின் உபரிநீரை பைப் லைன் மூலம் கிராம ஏரிகளில் நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் கோமணத்துடன் வந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மனு அளித்தனர். சேலம் வெள்ளாளக் குண்டம் பகுதியைச் விவசாயிகள் மற்றும் பல் வேறு விவசாய சங்கத்தினர் கோம ணத்துடன் சேலம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் வந்து மனு அளித் தனர். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது, காவிரி உபரிநீரை கிராம ஏரிகளான பஞ்சப்பள்ளி பூலாவரி, பனமரத்து பட்டி, வாழப்பாடி சிங்கிபுரம், வெள்ளாள குண்டம் உள்ளிட்ட ஏரிகளில் 10 அடி உய ரத்திற்கு பைப் லைன் அமைத்து நீரை கொண்டு வந்து நிரப்ப வேண் டும். இதை நிறைவேற்ற அரசு கொள்கை முடிவு எடுத்து, குழு அமைத்து நிதி ஒதுக்க வேண்டும். பனமரத்துப்பட்டி ஏரியை 50 அடி ஆழத்திற்கு ஆழப்படுத்தி நீர் வழிப் பாதைகளை அடையாளம் கண்டு தடுப்பணை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திருந்த னர். இதனால் ஆட்சியர் அலுவல கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.