அவிநாசி, ஜன. 18- அவிநாசி அருகே சின்ன கானூர் பகுதியில் 16,000 லிட்டர் எரிசாராயம் போலீசாரால் சனியன்று பறிமுதல் செய்யப்பட்டது. அவிநாசி ஒன்றியம், சின்ன கானூர் பகுதியில் ராமையநாய்க்கன் தோட் டம் உள்ளது. இத்தோட்டம் கணேசன் என்பவருக்குச் சொந்தமானது என கூறப்படுகிறது. இத்தோட்டத்து வீட்டை கேரளாவைச் சேர்ந்த ஜனார்த் தனன் என்பவருக்கு வாடகைக்கு விட் டுள்ளார். இங்கிருந்து வெள்ளை நிற கேன்களில் எரி சாராயம் தயாரித்து கேன்கள் மூலம் கேரளாவிற்க்கு ஏற்று மதி செய்து வருவதாகவும் கூறப்படு கிறது. இதுகுறித்து சேலம் மத்திய புல னாய்வு போலீசாருக்குக் கிடைத்த ரக சிய தகவலின் அடைப்படையில், இத் தோட்டத்தில் சோதனை நடத்தப் பட்டது. சோதனையில் 454 கேன்க ளில் வைக்கப்பட்டிருந்த 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப் பட்டது. இதையடுத்து வீட்டின் உரி மையாளர் கணேசனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், ஜனார்த்தனன் மற்றும் இதில் தொடர்புடையவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட் டுள்ளது.