திண்டிவனத்தில் வாலிபர் சங்க காத்திருப்பு போராட்டம் வெற்றி
விழுப்புரம், மே 5- திண்டிவனம் வட்டத்தில் 3 கிராமங்க ளுக்கு அடிப்படை வசதிகள் கேட்டு திங்களன்று (மே 5) வாலிபர் சங்கத்தினர் நடத்திய காத்திருப்பு போராட்டம் வெற்றி பெற்றது. விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் வட்டத்திற்கு உட்பட்ட ஏப்பாக்கம், வடம்பூண்டி, கடவம்பாக்கம் கிராம பொது மக்களுக்கு சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வட்டத் தலைவர் பார்த்திபன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பிரகாஷ், மாவட்டச் செய லாளர் சே.அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த்துறை அதி காரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மூன்று கிராமங்களுக்கும் அடிப்படை வசதிகள் செய்து தருவதாக எழுத்துப்பூர்வ உத்திரவாதம் அளித்தனர். அதனை ஏற்று போராட்டத்தை தற்காலிக மாக கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் சங்கத்தின் வட்டச் செயலாளர் சதீஷ் குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், மதன், திண்டிவனம் வட்ட நிர்வாகிகள் சிவக்குமார், திருமுருகன், தமிழ்செல்வன், சரவணன், லோகநாதன், கோகுல்ராஜ், ஆகாஷ், செல்வம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.