tamilnadu

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கடுமையாக எதிர்க்கிறோம்: திமுக  

 சென்னை, ஜூன் 21- நீர்நிலைகளை திமுகவினர் ஆக்கிரமித்துள்ளதாக அதிமுக நாளேட்டில் வந்திருப்பது ஜமுக்காளத்தில் வடிக்கடிய பொய் எனவும் கண்டிக்கத்தக்கது என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த  போது அவர் இவ்வாறு கூறினார்.மேலும் பேசிய அவர், மு.க.ஸ்டாலின் முதல்வரானால், அடுத்த 24 மணி நேரத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தற்போதைய ஆட்சியாளர்களால் அதனை செய்ய முடியவில்லை என்றால் பதவி விலக வேண்டும் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை திமுக  கடுமையாக எதிர்க்கிறது என்றும் கூறினார்.