சென்னை, டிச. 5 - தமிழ்நாட்டில் நவம்பர் 26 ஆம் நாள் முதல் வீசத் தொடங்கிய பெஞ்சால் புயல் காரணமாக விழுப்பு ரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடுமையான மழை வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டvது.
இதையடுத்து, இரண்டு நாட் களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு ரூ. 2,000 நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறி வித்தார்.
இந்த நிவாரணத் தொகையை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டையை காண் பித்து ரொக்கமாக பெற்றுக்கொள்ள லாம் என்று தெரிவிக்கப்பட்டது.
டோக்கன் விநியோகம்
அதன்படி ரூ. 2 ஆயிரம் வழங்குவ தற்கான பணிகள் வியாழனன்று துவங்கியுள்ளதாக, மாநில வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா ளர் பெ. அமுதா தெரிவித்தார்.
பெஞ்சால் புயல் நிவாரணத் தொகையை மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் (விழுப்புரம், கடலூர்) மண்டல இணைப்பதிவாளர் அளவில் தொகை வழங்கப்படவுள்ள தேதியை முடிவு செய்து டோக்கன் களை டிசம்பர் 5 முதல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல் நாள் முற்பகல் 50 பேருக்கும், பிற்பகல் 50 பேருக்கும் நிவாரணத் தொகை வழங்க ஏதுவாக டோக்கன்கள் விநியோகிக்கவும், இரண்டாம் நாள் முதல் தினந்தோறும் முற்பகல் 100 பேர் மற்றும் பிற்பகல் 100 பேர் என 200 பேருக்கு நிவாரணத் தொகை விநியோகிக்க ஏதுவாக டோக்கன்கள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த டோக்கன்களிலேயே நிவார ணத் தொகை பெற நியாய விலைக் கடைகளுக்கு வரவேண்டிய நாள் மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங் களை நிரப்பித் தருமாறு விற்பனை யாளர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
கூட்ட நெரிசலை தவிர்க்கவும்
டோக்கன்கள் வழங்கப்படும் போது கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்த்திடவும், எவ்விதமான இடர்பாடுகளும் ஏற்படாத வண்ணம், புகாருக்கு இடமின்றியும் நிவாரணம் வழங்கப்படுவதற்கு, காவல்துறை யுடன் ஒருங்கிணைந்து மண்டல இணைப்பதிவாளர் தக்க ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கினார் முதல்வர்
சென்னை, டிச. 5 -
வங்கக் கடலில் உருவான ‘பெஞ்சால்’ புயல் மழையால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இங்கு தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டிச.5 அன்று தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தன்னுடைய ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை தலைமைச் செயலாளர் நா. முருகானந்தத்திடம் வழங்கினார்.