tamilnadu

மாநகர பேருந்து ஓட்டுநர்களுக்கு முழு உடல் பரிசோதனை: போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு

சென்னை, ஜூன் 6- சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர் களுக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்ய போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், பணி காலத்தில் 10க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்படுத்திய 334 ஓட்டுநர்களுக்கு முழு உடல்  பரிசோதனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஓட்டுநர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யும் வகையில் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை பார்வை  2 இல் கண்டுள்ள கடிதத்தின் மூலம் ஒப்புதல் அளித்துள்ளனர்.

இக்கடிதத்தில், எதிர்வரும் 5.6.2024 முதல்  18.6.2024 வரை (சனி & ஞாயிறு நீங்களாக) ஒரு நாளைக்கு 33 ஓட்டுநர்கள் வீதம் 10  நாட்களுக்கு முழு உடல் மருத்துவப் பரிசோ தனை செய்யப்படும். இதில் 5 மருத்து வர்கள் அடங்கிய குழுவைக் கொண்டு கண், காது, எலும்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு,  தொண்டை, பொது மருத்துவ பரிசோதனை  மற்றும் மனநல மருத்துவ பரிசோதனை ஆகியவை செய்யப்படும். இதில் ஓட்டுநர் களுக்கு பரிசோதனைக்கு பின் தேவைக்கு ஏற்றவாறு மேலும் தேவைப்பட்டால் மேல் பரிசோதனை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

எனவே 334 பணியாளர்களை மருத்துவ பரிசோதனைக்கு இணைப்பில் கண்டுள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ள தேதிகளில்  அந்தந்த பணிமனைகளில் இருந்து தவறாமல் சென்னை ராஜீவ் காந்தி பொது  மருத்துவமனை கட்டிடம் 3இல் காலை 9 மணிக்கு அனுப்பிடவும், அன்றய தினத்திற்கு  மட்டும் வருகைப்பதிவு வழங்கிடவும் இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.