சென்னை:
மாமல்லபுரம் டி.எஸ்.பி அலுவலகத்தில் பார் உரிமையாளர் நெல்லை யப்பன் தற்கொலை செய்து கொண்டது குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்னுற காஞ்சி புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் பார்நடத்தி வந்த நெல்லை யப்பன் என்பவர், காவல் துறையினர் அதிக மாமூல் கேட்டு மிரட்டுவதாக அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததல், மனமுடைந்து மாமல்லபுரம் டி.எஸ்.பி அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.அவரது தற்கொலை குறித்து மாமல்லபுரம் டி.எஸ்.பி சுப்புராஜ், திருப்போரூர் ஆய்வாளர் கண்ணன், கேளம்பாக்கம் ஆய்வாளர் பாண்டி ஆகிய 3 பேர் சென்னையிலுள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே நெல்லையப்பன் தற்கொலை குறித்து, ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணை யம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.மேலும் தற்கொலை குறித்து 4 வாரத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தர விட்டுள்ளது.