tamilnadu

பேரா.அ.மார்க்சின் உரை நிகழ்ச்சி திடீர் ரத்து திருவாரூர் மத்திய பல்கலை. நிகழ்ச்சியில் அரசியல் தலையீட்டிற்கு மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம்

சென்னை,அக்.17- தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் ஒருங்கிணைப் பாளர்கள் பேரா. அருணன், க.  உதயகுமார் வியாழனன்று வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: திருவாரூர் மத்திய பல்கலைக் கழக நிர்வாகம் அக்டோபர் 15,16 ஆகிய தேதிகளில் மத நல்லிணக்கம் குறித்த இரண்டு நாள் இந்திய அளவிலான கருத்தரங்கங்களில் ‘பௌத்தமும், மதச்சார்பின்மை யும்’ என்ற தலைப்பில் பேரா.ச. மார்க்ஸ் அவர்களை பேச அழைத் திருந்தது. பேரா.அ.மார்க்சும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இசைவு தந்து பல்கலைக்கழக நிர்வா கம் அதற்கான ஏற்பாடு செய்திருந்த நிலையில் திடீரென அப்பல்கலைக்  கழக பேராசிரியை ஒருவர் பேரா. அ.மார்க்சின் உரை ரத்து செய்யப் பட்டுள்ளதாகவும், காரணம் கூற  இயலாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு பல்கலைக்கழக நிகழ்ச்சி யில் ஒரு பேராசிரியர் உரை நிகழ்த்த  இருந்த நிலையில் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதில் அர சியல் தலையீடு உள்ளது என்றே  நம்பத் தோன்றுகிறது. பல்கலைக் கழக நிர்வாகமும் எத்தகைய நிர்ப் பந்தம் வந்தது, அது யார் மூலம் வந்தது? என்பதை தெரிவிக்க வில்லை. பாஜக தலையீடு இருக்கக் கூடும் என கருத வேண்டியுள்ளது. எனவே, இதுபோன்ற பல்கலைக் கழக நிகழ்ச்சிகளுக்கு அரசியல் தலையீடு செய்வதை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிக்கிறது. மத்திய அரசு வரும் காலங்களில் இது போன்ற விசயங்களில் பல் கலைக்கழகங்கள் ஜனநாயக ரீதி யாக இயங்கிட அனுமதி தர வேண்டும் எனவும், தமிழக அரசும் இவ்விசயத்தில் பல்கலைக்கழ கத்தின் சுதந்திரத்தன்மையை பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மெனவும் தமிழ் மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்துகிறது.

சிறுபான்மையினரை மிரட்டும் பேச்சு: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும்
இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட களக்காடு பகுதியில் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முகாமிட்டு பிரச்சாரம் செய்து வரும் வேளையில் கேசவ னேரி மற்றும் கட்டார் குளம் ஜமாத் சார்பில் பொதுமக்கள், தலைவர் ஊருக்கு நியாயவிலைக்கடை அமைத்து தரவேண்டுமென கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவை அமைச்சர் வாங்க மறுத்ததுடன், ‘உங்களுக்கு நாங்க எதுக்கு செய்யணும், நீங்க தான் எங்களுக்கு ஓட்டு போட மாட்டீங்களே, கிறிஸ்டியனும் ஓட்டு போட மாட்டான்’ என திட்டியது டன், உங்களை காஷ்மீர் போன்று ஒதுக்கி வைக்க வேண்டிய நிலை வரும் என்று சங் பரிவார் அமைப்புகளின் குரலை எதிரொலித் துள்ளார். தமிழக மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட ஒரு அமைச்சர் மத ரீதியாக மக்களை அணுகுவதும், குறிப்பாக சிறுபான்மையினரை மிரட்டுவதும் அனுமதிக்க முடியாத செயலாகும். ராஜேந்திர பாலாஜியின் பேச்சு களை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாக கண்டிப்பது டன், அமைச்சர் தனது பேச்சுக்கு அப்பகுதி மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டுமென வலி யுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.