வரலாறு என்னை விடுதலை செய்யும்’ மேம்படுத்தப்பட்ட பதிப்பு வெளியீடு
வது அகில இந்திய மாநாடு ஏப்.2-6 தேதிகளில் மதுரையில் நடைபெற உள்ளது. இதனையொட்டி கட்சியின் தென்சென்னை மாணவர் அரங்க கிளை கள் சார்பில் வடபழனியில் கருத்தரங் கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பாரதி புத்தகால யம் பதிப்பித்துள்ள பிடல் காஸ்ட்ரோ வின் ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ நூலின் மேம்பட்ட பதிப்பை ஃபிரண்ட் லைன் முன்னாள் ஆசிரியர் ஆர்.விஜயசங்கர் வெளியிட்டு, ‘ஏகாதி பத்தியத்திற்கு எதிரான லத்தீன் அமெரிக்காவின் எழுச்சி’ எனும் தலைப் பில் உரையாற்றினார். லத்தீன் அமெரிக்க நாடுகள் உருவான வரலாறு, ஏகாதிபத்தியத் தின் சுரண்டல், அவருக்கு எதிரான போராட்டங்கள், சைமன் பொலிவார், ஒசே மார்த்தி, அலண்டே போன்றோரின் வரலாற்று பங்களிப்பை விளக்கிய விஜயசங்கர், “சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகு இனி சோசலிசத்திற்கு எதிர்காலம் இல்லை என்று அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் கொக்கரித்தன. இந்த நிலையில், லத்தீன் அமெரிக்க நாடுகளில் தேர்தல் கள் மூலம் இடதுசாரி, சோசலிச சக்தி கள் வெற்றி பெற்றன. இதை பிங்க் புரட்சி என்று அழைக்கப்படுகிறது. சுரண்டலுக்கு எதிராக 500 ஆண்டு கால போராட்டத்தின் தொடர்ச்சியாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் இத்த கைய மாற்றம் சாத்தியமானது.
1970 களிலேயே நவதாராளமயக் கொள்கை அமலாக்கப்பட்டது. இன்றைக்கு இந்தியாவில் எதிர்கொள்ளும் சவால் களை 50 ஆண்டுகளுக்கு முன்பே லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள மக்கள் அனுபவித்தனர். அதற்கெதி ராக நடைபெற்ற போராட்ட வடிவங் களை உள்வாங்கி, நவீன காலத்துக் கேற்ப செயல்பட வேண்டும்” என்றார். கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ம.சித்ரகலா தலைமை தாங்கினார். நூலின் முதல் பிரதியை சட்டக்கல்லூரி மாணவி கனிஷ்கா பெற்றுக்கொண்டார். நூலை அறிமுகம் செய்து மாவட்டக்குழு உறுப்பினர் தீ.சந்துரு, மாணவி ம.ஸ்வேதா ஆகியோர் பேசினர். மொழி பெயர்ப்பாளர்கள் வீ.பா.கணே சன், கமலாலயன், மாணவர் அரங்க ஒருங்கிணைப்பாளர் ரா.பாரதி, வாலிபர் அரங்க தலைவர் எம்.ஆர்.சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.