கொடிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லியில் ஐந்தாவது நாள் பேரெழுச்சியை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நவம்பர் 30 திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. பல்வேறு இடங்களில் காவல்துறையினர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டு, கைது செய்தனர். கட்சியின் மாநில, மாவட்டத் தலைவர்கள் இப்போராட்டங்களுக்கு தலைமையேற்றனர்.